இந்திய சாம்பியன்கள் விராட், ரோஹித்தை கடைசியாக பாத்துக்கோங்க.. நான் இல்லாதது அவமானம்.. கமின்ஸ் பேட்டி

Pat Cummins
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் துவங்கும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. கடைசியாக ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய அடுத்தடுத்த 2 ஐசிசி கோப்பைகளை வென்று சாதனை படைத்தது.

அதனால் 2027 உலகக் கோப்பையில் அவருடைய தலைமையில் இந்தியா களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியுமா என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அதனால் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

- Advertisement -

கடைசியா பாத்துக்கோங்க:

இந்நிலையில் கடந்த 15 வருடங்களில் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா விளையாடிய அனைத்து தொடர்களிலும் விராட், ரோஹித் விளையாடியதாக பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட அவர்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே ஆஸ்திரேலிய மக்கள் கடைசியாக அவர்களுடைய ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அவர்கள் விளையாடக்கூடிய இத்தொடரில் தம்மால் காயத்தால் விளையாட முடியாதாதது அவமானம் என்றும் கமின்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இது பற்றி ஜியோஹாட்ஸ்டார் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 15 வருடங்களில் கிட்டத்தட்ட அனைத்து இந்திய அணிகளிலும் விராட், ரோகித் அங்கமாக இருந்தார்கள்”

- Advertisement -

கமின்ஸ் ஏமாற்றம்:

“எனவே அவர்கள் இங்கே விளையாடுவதை ஆஸ்திரேலியா மக்கள் பார்க்க இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கலாம். எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் சாம்பியன்களாக இருக்கும் அவர்கள் நிறைய ஆதரவுகளைக் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு எதிராக நாங்கள் விளையாடும் போது ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட இந்தியாவுக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடர்களை இம்முறை நான் தவற விடுவது அவமானமாகும்”

இதையும் படிங்க: சச்சின் போன்ற பரிதாபம்.. பேட்டை அடித்து நொறுக்கி கோபமான ஆப்கானிஸ்தான் வீரர்.. நடந்தது என்ன?

“இம்முறை ரசிகர்களின் கூட்டம் பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அத்தொடருக்காக ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனவே இது போன்ற பெரிய தொடரை நீங்கள் தவற விடும் போது ஏமாற்றத்தை சந்திப்பீர்கள்” என்று கூறினார். மேலும் அத்தொடரில் ஆஸ்திரேலிய அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி இந்தியாவை தோற்கடிக்கும் என்றும் கமின்ஸ் நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement