இந்தியாவுக்காக 2016 மாதிரி மேஜிக் செய்யத் தயார்.. அடேய் சந்து கேப்பில் வாய்ப்பு கேட்ட நாயருக்கு.. அஸ்வின் பதில்

R Ashwin
- Advertisement -

இந்தியா கிரிக்கெட் அணி கொல்கத்தாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 15 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோற்றது. அடுத்ததாக கௌகாத்தியில் நடைபெறும் 2வது போட்டியிலும் இந்தியா தோல்வியைத் தழுவும் நிலையில் இருக்கிறது. நவம்பர் 22ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 489 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக சீனுரான் முத்துசாமி சதமடித்து 106, மார்க்கோ யான்சன் 93 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய இந்தியா வெறும் 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58, வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

சந்து கேப்பில் கருண் நாயர்:

அடுத்ததாக விளையாடும் தென்னாபிரிக்கா 3வது நாள் முடிவில் 26/0 ரன்களை எடுத்து மொத்தமாக 314 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் இப்போட்டியில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கான வாய்ப்பு அதிகமாகியுள்ளது. வரலாற்றில் 2016இல் மட்டுமே சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் கொடுத்தும் இந்தியா வென்றுள்ளது.

சென்னையில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 477 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக விளையாடிய இந்தியா கருண் நாயர் 303* ரன்கள் குவித்து மேஜிக் நிகழ்த்திய உதவியுடன் 759/7 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்தை 207க்கு சுருட்டிய இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று மிரட்டியது. ஆனால் இப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் இந்தியா 201 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதால் தோல்வி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

- Advertisement -

அஸ்வின் பதில்:

இந்நிலையில் தமக்கு வாய்ப்பு கொடுத்தால் தடுமாறும் இந்திய அணிக்கு 2016 போல உதவுவேன் என்ற வகையில் கருண் நாயர் ட்விட்டரில் மறைமுகமாக பதிவிட்டுள்ளார். இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சில நிபந்தனைகள் உங்களுக்கு மனதிற்குத் தெரிந்த உணர்வைத் தருகின்றன. மேலும் வெளியில் இல்லாததன் மௌனம் அதன் சொந்தக் கடிப்பைச் சேர்க்கிறது” என்ற பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக மாபெரும் சாதனை நிகழ்த்திய – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

அப்படி சந்து கேப்பில் வாய்ப்பு கேட்பதைப் பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் “அடேய்” என்று சிரித்துக் கொண்டே ஒற்றை வார்த்தையில் கருண் நாயருக்கு பதிலளித்துள்ளார். ஏனெனில் 8 வருடங்கள் போராடி கம்பேக் கொடுத்த அவர் கடந்த இங்கிலாந்து தொடரில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்து தடுமாற்றமாக விளையாடினார். அதனால் “உங்களிடம் இன்னும் எதிர்பார்த்தோம்” என்று சொல்லி அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு தலைவர் அகர்கர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement