இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த சில நாட்களில் பேட்டிங் துறையின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் ஓய்வு பெற்றது ரசிகர்களை சோகமடைய வைத்தது. இதைத் தொடர்ந்து அவர்களுடைய இடத்தில் விளையாடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதில் முக்கியமான கேப்டன்ஷிப் பொறுப்பு சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் ஜஸ்ப்ரித் பும்ரா கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் கேப்டனாக அபாரமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் அடிக்கடி காயத்தைச் சந்திப்பவராக இருக்கிறார். எனவே அவருக்கு பதிலாக சுப்மன் கில்லை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கேப்டனாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.
ஜடேஜான்னு ஒருத்தர் இருக்காரு:
இருப்பினும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடிய ரெக்கார்டை கொண்டிருக்கவில்லை. அதனால் முதலில் அவர் பிளேயிங் லெவனிலேயே இருக்கக் கூடாது என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்தார். இந்நிலையில் பும்ரா இல்லையெனில் தற்போதைய இந்திய அணியில் மிகவும் சீனியராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா தான் கேப்டனாக வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
மேலும் சுப்மன் கில் முதலில் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் யார் அசத்துகிறார்கள், அதனுடைய அடிப்படை போன்ற விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அஸ்வின் கூறியுள்ளார். அதுவரை அவர் துணைக் கேப்டனாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற சொல்லும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரவீந்திர ஜடேஜா தான் இந்திய அணியின் மிகவும் மூத்த வீரர் என்பதை மறந்து விடாதீர்கள்”
அஸ்வின் பரிந்துரை:
“எனவே அவர் கேப்டன்ஷிப் பொறுப்பு சம்பந்தமான விவாதங்களில் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு புதிய பையனைக் கேப்டனாக வளர்க்க நினைத்தால் அவரை 2 வருடங்கள் துணை கேப்டனாக நியமனம் செய்யுங்கள். ஜடேஜா கேப்டன்ஷிப் வேலையை செய்வார். ஜடேஜா தலைமையில் அவர் துணைக் கேப்டனாக செயல்படலாம்”
இதையும் படிங்க: உங்களுக்கு இதுவே போதும் அப்படியே வீட்டுக்கு கிளம்புங்க.. சிஎஸ்கே அணியை கண்டு கொள்ளாத பிசிசிஐ
“இங்கே நான் ஜடேஜாவை வைல்ட் கார்டாக போடுகிறேன். குஜராத் டைட்டன்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப் பெறும் என்று நம்புகிறேன். கில் அதில் விளையாடிய கௌரவத்தை பெற்றால் அடுத்தக் கேப்டனாக வருவது எளிதாக இருக்கும். ஆனால் ஐபிஎல் தொடரில் ஒரு வருடம் சிறப்பாக விளையாடுவதை வைத்துக்கொண்டு கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் செய்வது எளிதல்ல. ஏனெனில் டெஸ்ட் கேப்டன் முதலில் உள்ளூர் கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும்” எனக் கூறினார்.



