உங்களுக்கு இதுவே போதும் அப்படியே வீட்டுக்கு கிளம்புங்க.. சிஎஸ்கே அணியை கண்டு கொள்ளாத பிசிசிஐ

CSK Team
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சீராக மாறியுள்ளதால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் மீண்டும் மே 17ஆம் தேதி துவங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்தத் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ பிளே ஆஃப் சுற்றுக்கான மைதானங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.

அந்த அட்டவணையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தங்களது சொந்த மண்ணில் கொல்கத்தாவில் எதிர்கொள்கிறது. அதே போல குஜராத், மும்பை, டெல்லி ஆகிய அணிகளும் தங்களது போட்டிகளை சொந்த மண்ணில் விளையாடுகின்றன. சொல்லப்போனால் லீக் சுற்றுடன் வெளியேறிய ராஜஸ்தான் அணி கூட தங்களுடைய 2 போட்டிகளில் ஒரு போட்டியை சொந்த ஊரான ஜெய்ப்பூரில் விளையாட உள்ளது.

- Advertisement -

அப்படியே கிளம்புங்க:

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய சொந்த ஊரான சேப்பாக்கத்தில் எந்த போட்டியையும் விளையாடப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள சிஎஸ்கே இந்த வருடம் ஆரம்பம் முதலே மோசமாக விளையாடி வந்தது. அதனால் முதல் அணியாக லீக் சுற்றுடன் நடையைக் கட்டிய சிஎஸ்கே இதுவரை 12 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

அதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் அந்த அணி இன்னும் 2 போட்டிகளில் விளையாட உள்ளது. ஆனால் அந்த 2 போட்டிகளையும் டெல்லி மற்றும் அகமதாபாத் மைதானத்தில் முறையே ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிக்கு எதிராக சிஎஸ்கே விளையாட உள்ளது. இதற்கான காரணம் என்னவெனில் இந்த வருடம் சிஎஸ்கே லீக் சுற்றுடன் முதல் அணியாக வெளியேறி விட்டது.

- Advertisement -

கண்டுக்காத பிசிசிஐ:

அதனால் இனிமேல் சொந்த ஊரில் விளையாடி என்ன செய்யப் போகிறீர்கள்? என்று பிசிசிஐ கருதுகிறது. எனவே தங்களுடைய செலவை குறைக்கும் வகையில் சிஎஸ்கே அணியின் எஞ்சிய 2 போட்டிகளையும் வட இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதிலிருந்து உங்களுக்கு இதுவே போதும் அப்படியே வீட்டுக்கு கிளம்புங்க என்ற வகையில் சிஎஸ்கே அணியை பிசிசிஐ கண்டு கொள்ளவில்லை என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: ஐ.பி.எல் வரலாற்றில் முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

சிஎஸ்கே அணியை தவிர்த்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இது போன்ற நிலையை சந்தித்துள்ளது. அந்த அணியும் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறி விட்டது. அதனால் அந்த அணியும் தங்களுடைய எஞ்சியப் போட்டிகளை சொந்த ஊரில் விளையாடாமல் டெல்லி மற்றும் பெங்களூருவில் விளையாடி விட்டு வீட்டுக்கு கிளம்பத் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement