மில்லியன் டாலர் ரோஹித் 202 ரன்ஸ் அடிக்க எடையே காரணம்.. கோலியும் திரும்ப வந்துட்டாரு.. அஸ்வின் மகிழ்ச்சி

R Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்றது. இருப்பினும் 3வது போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்று ஒயிட்வாஷ் அவமானத் தோல்வியை தவிர்த்தது. அந்த வெற்றிக்கு பேட்டிங் துறையில் ரோஹித் சர்மா சதத்தை அடித்து 121*, விராட் கோலி 74* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார்கள்.

அதனால் 2027 உலகக் கோப்பைக்கு முன் கழற்றி விட முயற்சித்து வரும் தேர்வுக்குழுவுக்கு அவர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். குறிப்பாக ரோஹித் தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வென்று சாதனை படைத்தது. அதனால் 2027 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா கேப்டனாக விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஒல்லியான ரோஹித்:

ஆனால் அப்போது 40 வயதில் அவரால் ஃபிட்டாக அசத்த முடியாது என்று தேர்வுக்குழு நம்புகிறது. அதனாலேயே அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. இருப்பினும் தரத்தில் குறையாக ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் 202 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருது வென்றார். அத்துடன் 38 வயதில் ஆஸ்திரேலியாவில் தொடர்நாயகன் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

இந்நிலையில் ரோஹித் சர்மா தம்முடைய எடையை வெகுவாக குறைத்து ஃபிட்டாக மாறியதே 202 ரன்கள் அடிக்க முக்கிய காரணம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதே போல விராட் கோலியும் ஃபார்முக்கு திரும்பியதில் மகிழ்ச்சி என்று தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா மிகவும் ஃபிட்டாக ஒல்லியாக முறையாக தெரிகிறார்”

- Advertisement -

அஸ்வின் மகிழ்ச்சி:

“அதனாலேயே அவரால் ரன்கள் அடித்து அசத்த முடிகிறது. சுப்மன் கில்லுடன் விளையாடும் போது அவர் 3 ரன்கள் எடுக்க விரும்பினார். ஆனால் கில் மறுத்து விட்டார். அந்தளவுக்கு பேட்டிங்கில் ரோஹித் தரத்தைக் கொண்டுள்ளார். நீங்கள் எடையைக் குறைத்து ஃபிட்டாகும் போது நன்றாக உணர்வீர்கள். ஒரு தசாப்தத்திற்கும் மேல் சிறந்த வெள்ளைப்பந்து கிரிக்கெட்டராக திகழும் ரோஹித் தற்போது மில்லியன் டாலர் மனிதராகத் தெரிகிறார்”

இதையும் படிங்க: ஹசி மாதிரி இந்தியாவுக்காக என்னால இதை செய்ய முடியும்.. ஆஸியில் என்னை மிஸ் பண்ணாங்க.. ரஹானே ஆதங்கம்

“அவரும் விராட் கோலியும் ரன்கள் அடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இன்னும் விராட் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் ரன்கள் அடிக்கும் வழியை அவர் கண்டறிந்துள்ளது நேராக அடித்த பவுண்டரியில் தெரிந்தது. தற்போது மகிழ்ச்சியுடன் விளையாடும் அவர் சிங்கிள் எடுத்த போது ரசிகர்கள் கைதட்டி பாராட்டினார்” என்று கூறினார்.

Advertisement