3 தசாப்தம் 25 வருட உழைப்பு.. நன்றி மறவாமல் இதை செய்த மகளிரணிக்கு தலை வணங்குறேன்.. அஸ்வின் பேட்டி

- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் வென்ற புதிய சரித்திரம் படைத்தது. அத்தொடரில் லீக் சுற்றில் தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்த இந்தியா செமி ஃபைனல் செல்லுமா என்ற கேள்வி எழுந்தது. அப்போதிலிருந்து அபாரமாக விளையாடிய இந்தியா செமி ஃபைனலுக்குச் சென்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்து இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது.

அதனால் மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக இந்தியா வென்று சாதனை படைத்தது. அப்போட்டியின் முடிவில் முன்னாள் இந்திய கேப்டன்கள் மிதாலி ராஜ், ஜூலன் ஜோஸ்வாமி, அஞ்சும் சோப்ரா ஆகியோரை கேப்டன் ஹர்மன்ப்ரீத் களத்திற்கு வர வைத்தார். தமக்கு முன்பு வரை கேப்டன்களாக இருந்த அவர்கள் இந்திய அணியை கட்டமைப்பதற்கு மிகவும் முக்கிய பங்காற்றினார்கள்.

- Advertisement -

நன்றி மறவாத புதிய தலைமுறை:

எனவே அவர்களுடைய கையில் உலகக் கோப்பையை கொடுத்த ஹர்மன்ப்ரீத் இந்திய அணியின் வெற்றியைச் சேர்ந்து கொண்டாடியது ரசிகர்களின் நெஞ்சைத் தொட்டது. இந்நிலையில் மகளிர் உலகக் கோப்பையை 25 வருடங்கள் கடின உழைப்பை போட்டு இந்தியா போராடி வென்றுள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதற்கு முக்கிய பங்காற்றிய முன்னாள் கேப்டன்களின் பங்கு மற்றும் நன்றியை மறவாத இந்திய அணி அவர்கள் கையில் கோப்பையை கொடுத்து கொண்டாடியதை பாராட்ட வேண்டும் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “மொத்த இந்திய அணியும் கோப்பையை மிதாலி ராஜ் கையில் கொடுத்தார்கள். இப்படி செய்ததற்காக நான் தலைவணங்கி பேசுகிறேன். ஆடவர் இந்திய அணி கூட அப்படி செய்ததில்லை. சில நேரங்களில் அவர்கள் ஊடகங்களின் முன்பு முன்னாள் கேப்டன் பெயரை சொல்வார்கள். ஆனால் தற்போதைய தலைமுறை முந்தைய தலைமுறைக்கு இப்படி பாராட்டுக்கள் கொடுத்ததை நான் பார்த்ததில்லை”

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:

“அந்த முன்னாள் வீராங்கனைகள் எங்களுடைய தலைமுறையை விட புதிய தலைமுறை சிறந்தது என்று சொன்னார்கள். ஆனால் அஞ்சும் சோப்ரா, மிதாலி ராஜ் ஆகியோர் கையில் தற்போதைய தலைமுறை கோப்பையை கொடுத்துள்ளது. அத்துடன் விதை ஊற்றி மரம் வளர்க்க உதவிய நீங்களும் வின்னர்கள் பக்கத்தில் நிற்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொள்ளனர். இது நம்ப முடியாத நல்ல விஷயமாகும்”

இதையும் படிங்க: இந்திய அணியில் அவரு ரொம்ப டேலண்ட்டான பிளேயர்.. அவரை சீக்கிரம் அவுட் ஆக்கனும் – மேட் குன்னுமேன் கருத்து

“இந்த வெற்றி ஒரு நாளில் கிடைத்ததல்ல. கிட்டதட்ட 25 வருடங்கள் 3 தசாப்தங்கள் உழைத்ததால் கிடைத்த வெற்றி. அதனாலேயே இந்த இந்திய மகளிரணி சிறப்பானது. நீங்கள் வெற்றி பெற்று உச்சகட்ட தருணத்தில் இருக்கும் போது கூட முந்தைய தலைமுறையை நினைவில் கொள்கிறீர்கள். இத்தனைக்கும் அதை செய்யுமாறு யாரும் கேட்கவில்லை” என்று கூறினார்.

Advertisement