இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றினை பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.
இந்திய அணியில் அவர் ரொம்ப டேலண்ட் பிளேயர் : மேட் குன்னுமேன்
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி கோல்டு கோஸ்ட் மைதானத்தில் வரும் நவம்பர் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக தற்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெறும் என்பதனால் இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டி நடைபெற இருக்கும் குயின்ஸ்லாந்து நகரின் லோக்கல் வீரரான மேட் குன்னுமேன் தனது சொந்த மைதானத்தில் விளையாட இருப்பது குறித்தும், இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
நான் இந்த மைதானத்தில் விளையாடுவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் எப்போதுமே என்னுடைய சொந்த மைதானத்தில் விளையாடும் போது அது ஒரு நல்ல உணர்வை தரும். மீண்டும் இங்கு என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கிறேன். இந்த மைதானத்தில் பவுண்டரிகளின் அளவு சிறியது என்பதனால் இது ஒரு ஹை ஸ்கோரிங் போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அதோடு இந்த மைதானம் ஆஸ்திரேலிய அணிக்கும் ஒரு நல்ல நினைவுகளை கொடுத்த மைதானமாக இருந்து வருகிறது. இந்திய அணியை பொறுத்தவரை இந்த தொடரில் அவர்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அபிஷேக் சர்மா மிகவும் டேலண்ட்டான வீரராக இருக்கிறார். அடுத்த போட்டியில் அவரை எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் யாரேனும் ஒருவர் முதல் இரண்டு ஓவர்களிலேயே வீழ்த்தி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : இந்தியாவுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தி.. கடைசி 2 டி20யிலிருந்து டிராவிஸ் ஹெட் விலகல்.. வெளியான அறிவிப்பு
ஏனெனில் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடும் திறமை கொண்ட அவரை சில ஓவர்கள் வரை விட்டால் கூட போட்டியின் நிலையை மாற்றி விடுவார். எனவே அவரை வெகு விரைவாக வீழ்த்தி போட்டியை எங்கள் பக்கம் கொண்டு வருவோம் என்று நம்புவதாக மேட் குன்னுமேன் கூறியது குறிப்பிடத்தக்கது.



