சாம்பியன்ஸ் ட்ராபி, ஐபிஎல்ல அசத்துனாலும் ஸ்ரேயாஸ்க்கு டெஸ்ட் வாய்ப்பு கொடுக்கக்கூடாது.. அஸ்வின் பேட்டி

R Ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் தனது இழந்த இடங்களைப் பிடிப்பதற்காக போராடி வருகிறார். 2023 உலகக்கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்திய அவர் 2024 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயத்தைச் சந்தித்தார். அந்தக் காயத்திலிருந்து விரைவில் குணமடைந்த அவரை ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது.

ஆனால் அதைக் கேட்காத அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை. அதன் காரணமாக கோபமடைந்த பிசிசிஐ இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயரை அதிரடியாக நீக்கியது. அதனால் பின்னடைவை சந்தித்த அவர் மீண்டும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடினார். அடுத்ததாக வந்த புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரை ஒருநாள் அணிக்குள் மீண்டும் கொண்டு வந்தார்.

- Advertisement -

டெஸ்ட் வாய்ப்பு:

அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த இங்கிலாந்து தொடரில் அசத்தார். அதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் அதிக ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினர். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கும் அவர் அங்கேயும் அசத்தும் பட்சத்தில் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பை பெறுவார் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக ஐபிஎல் முடிந்ததும் ஜூன் மாதம் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அசத்தினாலும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதற்கு ரஞ்சிக்கோப்பையில் அசத்த வேண்டும் என்று தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சம்மந்தமற்ற பேச்சுக்கள்:

“எனக்கு ஒரு விஷயத்தைச் சொல்லுங்கள். ஐபிஎல் தொடரில் அசத்துவதால் எப்படி டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற முடியும்? நீங்கள் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடுவதன் வாயிலாக எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆட்டத்தில் முன்னேற முடியும்? நீங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினால், அந்த வீரர் டெஸ்ட் அணியில் இருப்பதைப் பற்றி ஒருவர் கட்டுரை எழுதுகிறார்”

இதையும் படிங்க: ஸ்ரேயாஸை நான் தான் 26.75 கோடிக்கு எப்படியாவது வாங்க சொன்னேன்.. காரணம் இதான்.. பாண்டிங் பேட்டி

“அதே போல ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தினால் உடனே அவர் டி20 அணியில் விளையாடுவதைப் பற்றி பேசுகின்றனர். இப்படி பேசுவது தவறில்லையா? ஐபிஎல் தொடரில் அசத்துவதை வைத்து உங்களால் டி20 ஆட்டத்தில் மட்டுமே முன்னேற்றத்தை சந்திக்க முடியும். டெஸ்ட் போட்டிகள் வித்தியாசமானது. சாம்பியன்ஸ் ட்ராபியில் ஸ்ரேயாஸ் ஐயர் வெளிப்படுத்திய ஃபார்மை ஐபிஎல் தொடரிலும் பின்பற்றினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். நல்ல வீரரான அவர் கடந்த வருடம் கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவினார்” என்று கூறினார்.

Advertisement