ஹார்ட் அட்டாக்கே வந்துருக்கும்.. சச்சின், கபில் தேவ் ஸ்க்ரீட்ஷாட் வாழ்த்தை பகிர்ந்த அஸ்வின்.. கோலிக்கும் பதில்

R Ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றுள்ளார். 2010 – 2014 காலகட்டங்களில் சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோல்வியை சந்திக்காமல் இருக்க அஸ்வின் முக்கிய பங்காற்றினார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகள் வென்று அவர் உலக சாதனை படைத்துள்ளார்.

2011 உலகக் கோப்பை வெற்றியாளரான அவர் 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் தமிழ்நாட்டிலிருந்து மிகச் சிறந்த வீரராக இந்தியாவுக்கு விளையாடிய அஸ்வின் 38 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குறிப்பாக வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு இந்திய அணி தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் இருந்து வந்தது.

- Advertisement -

சச்சின், கபில் தேவ் வாழ்த்து:

அதனால் ஏமாற்றடைந்த அஸ்வின் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவருக்கு ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்தார்கள். இந்நிலையில் ஓய்வு பெற்ற நாளன்று தமக்கு ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கபில் தேவ் ஆகியோர் நேரடியாக தொலைபேசியில் அழைத்து வாழ்த்திய ஸ்கிரீன் ஷாட்டை அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்துடன் இது பற்றி அஸ்வின் ட்விட்டரில் தெரிவித்துள்ளது பின்வருமாறு. “25 வருடங்களுக்கு முன்பாக என்னுடைய இந்திய கிரிக்கெட்டராக கேரியரின் கடைசி நாளில் ஓய்வு பெற்ற என்னுடைய கையில் உள்ள தொலைபேசியில் இது இருக்கும் (சச்சின், கபில் வாழ்த்து) என்று யாராவது சொல்லியிருந்தால் எனக்கு ஹார்ட் அட்டாக் தான் வந்திருக்கும். சச்சின் டெண்டுல்கர் மற்றும் கபில் தேவ் பாரஜிக்கு நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

கோலிக்கும் பதில்:

அதே போல காபாவில் அஸ்வின் ஓய்வு முடிவை அறிவித்ததும் விராட் கோலி அருகில் சென்று கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் 15 வருடங்களாக ஒன்றாக விளையாடிய அஸ்வின் திடீரென ஓய்வு பெறுவது தமக்கு பழைய நினைவுகளையும் உணர்ச்சிமிக்க தருணங்களையும் நினைவுபடுத்துவதாக விராட் கோலி ட்விட்டரில் பாராட்டினார். அத்துடன் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் லெஜெண்ட் என்றும் விராட் கோலி பாராட்டியிருந்தார்.

இதையும் படிங்க: அந்த 2 இந்திய வீரர்களை டார்கெட் செய்தோம்.. ஆனா மிஸ் ஆயிடுச்சி – ஆர்.சி.பி அணியின் இயக்குனர் தகவல்

அவருக்கும் தற்போது ட்விட்டரில் அஸ்வின் கொடுத்துள்ள பதில் பின்வருமாறு. “நன்றி நண்பா. ஏற்கனவே உங்களிடம் சொன்னது போல நீங்கள் மெல்போர்னில் நடைபெறும் அடுத்த போட்டியில் நானும் உங்களுடன் பேட்டிங் செய்ய களமிறங்குவேன்” என்று கூறினார். அதாவது இந்திய அணியிலிருந்து விடை பெற்றாலும் எப்போதும் உங்களுடன் நான் இருப்பேன் என்று விராட் கோலிக்கு அஸ்வின் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement