அந்தளவுக்கு ஸ்டுப்பிட் கிடையாது.. உலகிலேயே ரிஷப் பண்ட் சிறந்த டிஃபென்ஸ் கொண்டவர்.. அஸ்வின் பேட்டி

R Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஏமாற்றத் தோல்வியை சந்தித்தது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராகவும் ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்ததால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. முன்னதாக அந்தத் தொடரில் ரிஷப் பண்ட் பெரும்பாலான போட்டிகளில் டி20 போல அதிரடியாக விளையாட முயற்சித்து தன்னுடைய விக்கெட்டை பரிசாக கொடுத்தார்.

அதனால் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அவரை ஸ்டுப்பிட் என்று நேரலையில் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் முட்டாள் என்று விமர்சிக்கும் அளவுக்கு ரிசப் பண்ட் மோசமான டெஸ்ட் பேட்ஸ்மேன் கிடையாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதரவு கூறியுள்ளார். சொல்லப்போனால் அவரிடம் உலகிலேயே மிகச் சிறந்த தடுப்பாட்டம் (டிஃபென்ஸ்) இருப்பதாகவும் அஸ்வின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சிறந்த டிஃபென்ஸ்:

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அஸ்வின் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் தடுப்பாட்டம் விளையாடி மிகவும் அரிதாகவே விக்கெட்டை இழப்பார். ஏனெனில் இந்த உலகிலேயே அவரிடம் ஒரு சிறந்த டிஃபென்ஸ் இருக்கிறது. இப்போதெல்லாம் தடுப்பாட்டம் என்பது மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது. தனது மென்மையான கைகளில் அவர் சிறந்த தடுப்பாட்டத்தை வைத்துள்ளார்”

“அவருக்கு எதிராக வலைப் பயிற்சியில் நான் நிறைய பவுலிங் செய்துள்ளேன். அப்போது போல்ட், எட்ஜ், எல்பிடபிள்யூ முறைகளில் அவர் அவுட் ஆனதில்லை. அந்த வகையில் அவரிடம் சிறந்த தடுப்பாட்டம் இருக்கிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல கவாஸ்கர் விமர்சித்த அடுத்த இன்னிங்ஸில் 103 பந்துகளை எதிர்கொண்டு நங்கூரமாக விளையாடிய ரிஷப் பண்ட் 30 ரன்கள் எடுத்திருந்த போது அதிரடியாக விளையாட முயற்சித்து அவுட்டானார்.

- Advertisement -

திறமையும் அறியாமையும்:

அதே போல சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டியில் 98 பந்துகளை எதிர்கொண்ட அவர் அதிகபட்சமாக 40 ரன்கள் குவித்து அசத்தினார். ஆனால் அடுத்த இன்னிங்ஸில் நெருப்பாக ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய ரிஷப் பண்ட் 29 பந்துகளில் அரை சதத்தை அடித்தார். அதன் வாயிலாக ஆஸ்திரேலியா மண்ணில் வேகமான டெஸ்ட் அரை சதத்தை அடித்த வெளிநாட்டு வீரராகவும் அவர் சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: 18 விக்கெட்ஸ்.. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் சக்ரவர்த்திக்கு கண்டிப்பா வாய்ப்பிருக்கு.. 2 காரணம் இதோ

அந்த வகையில் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடும் பொறுமையும் திறமையும் அவரிடம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை எப்போது பயன்படுத்த வேண்டும் என்று ரிசப் பண்ட் அறிந்து செயல்படுவது மட்டும் அவசியமாகிறது. அதைச் செய்தால் இன்னும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேட்ச் வின்னராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement