நியூசிலாந்துக்கு எதிராக தங்கள் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா முழுமையான ஒய்ட் வாஸ் தோல்வியை சந்தித்தது. மேலும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு தொடரில் இந்தியா முதல் முறையாக தோற்றது.
அத்துடன் 12 வருடங்கள் கழித்து ஒட்டுமொத்தமாக சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றது. இத்தனைக்கும் ரோஹித் சர்மா தலைமையில் உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் இந்திய அணியில் நிறைந்திருந்தார்கள். அப்படி இருந்தும் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் அவர்கள் சுமாராக விளையாடியது இந்தியாவின் வரலாறு காணாத தோல்விக்கு முக்கிய காரணமானது.
மன்னிப்பு கேட்கணுமா:
அந்த தோல்விக்கு ரோகித், விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட சீனியர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் அந்த தோல்விக்கு பொறுப்பேற்று அவர்களை கழற்றி விட வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் கோரிக்கை வைக்கத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் 12 வருடங்கள் கழித்து இந்தியா தோற்றதை வைத்து வீரர்களின் திறமையை மதிப்பிட வேண்டாம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ரசிகர்களை விட களத்தில் விளையாடி தோல்வியை சந்தித்த இந்திய வீரர்களுக்கு தான் அந்தத் தோல்வியின் சொல்ல முடியாத உண்மையான வலி தெரியும் என்று அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்த தோல்விக்காக மக்கள் எவ்வாறு ரியாக்சன் செய்தார்கள் என்பதை பார்த்தது கடினமாக இருந்தது. அவர்கள் எப்படி ரியாக்சன் செய்தார்கள்?”
அஸ்வின் ஆதங்கம்:
“அனைவரும் எங்களை மன்னிப்பு கேட்க சொன்னார்கள். ஆனால் சார் இது விளையாட்டு. இங்கே இந்திய கிரிக்கெட்டின் ரசிகர்கள் அனைவருமே வலியை சந்தித்துள்ளோம் என்பதை சொல்ல விரும்புகிறேன். ஆனால் அணியில் விளையாடிய வீரர்களை விட யாரும் வலியை சந்தித்திருக்க முடியாது என்று நான் சத்தியமாக சொல்வேன். எனவே அந்த வலியை சந்தேகப்படுவது நியாயமானதாக இருக்காது”
இதையும் படிங்க: தோனி மாதிரி.. ஆண்டர்சன் ஐபிஎல்க்கு வராரு.. பழைய மாதிரி முடியாதுன்னாலும் இதை செய்யலாம்.. ஏபிடி பேட்டி
“ஏனெனில் வீரர்கள் தங்களுடைய கேரியரை உருவாக்குகிறார்கள். அவர்களுடைய கேரியர் களத்தில் நடைபெறும் விஷயங்களால் உடைக்கப்படலாம். எனவே அவர்களுடைய கேரக்டரை யாரும் உடைக்க கூடாது என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.



