தோனி மாதிரி.. ஆண்டர்சன் ஐபிஎல்க்கு வராரு.. பழைய மாதிரி முடியாதுன்னாலும் இதை செய்யலாம்.. ஏபிடி பேட்டி

Ab de villiers
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. அந்த ஏலத்தில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு மத்தியில் இங்கிலாந்தின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பங்கேற்க உள்ளது ஆச்சரியமாக அமைந்துள்ளது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் உலகிலேயே அதிக விக்கெட் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்தவர்.

இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் அவர் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. அத்துடன் தம்முடைய கேரியரின் உச்சகட்ட காலங்களில் ஐபிஎல் தொடரில் பங்கேற்காத அவர் தற்போது 42 வயதை தொட்டு விட்டார். அதனால் அவரால் ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகமாகும். அத்துடன் பெரும்பாலான அணிகள் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களையே வாங்க விரும்புவார்கள்.

- Advertisement -

தோனி போல:

அதன் காரணமாக அவரை யாரும் வாங்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தோனியை போல் 42 வயதிலும் ஐபிஎல் தொடரில் விளையாட ஆண்டர்சன் வருவதாக ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது தோனி தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டது போலவே தோன்றுகிறது”

“ஆண்டர்சன் தன்னுடைய அடிப்படை விலையை 1.25 கோடிகளாக நிர்ணயித்துள்ளார். அவருடைய தரத்திற்கு அது நிகரானது இல்லை. இருப்பினும் அவர் அதே விலைக்கு ஏலத்தில் வாங்கப்படலாம். இருப்பினும் 3 மாதம் இந்தியாவுக்கு வந்து விளையாடுவதற்காக அவர் தன்னுடைய குடும்பத்தை விட்டு வருவதற்கு தயாராக உள்ளார். அவர் விளையாடா விட்டாலும் வாங்கப்பட்டால் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தனது அனுபவத்தை பகிர்வார்”

- Advertisement -

ஏபிடி கருத்து:

“ஒருவேளை நானாக இருந்தால் ஏதேனும் ஒரு ஐபிஎல் அணி 2 – 3 கோடிக்கு அவரை வாங்குவதை விரும்புகிறேன். இளம் வீரர்களுக்கு தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்காகவே அவரை நான் வாங்குவேன். ஒருவேளை 42 வயதில் அவரால் கடந்த காலத்தைப் போல் அசத்த முடியாமல் போகலாம்”

இதையும் படிங்க: ஐ.பி.எல் ஏலத்தில் ரிஷப் பண்ட் 26 கோடி வரை செல்வார்.. ஏன் தெரியுமா? – ஆகாஷ் சோப்ரா விளக்கம்

“அனுபவத்தை பார்த்து அவரை யாராவது வாங்குவார்கள் என்று நம்புகிறேன். மிகச் சிறந்த வீரரான அவர் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள இளம் வீரர்களிடம் தன்னுடைய அனுபவத்தை பகிர்வதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார். அந்த வகையில் அனுபவத்துக்காகவே ஆண்டர்சனை ஏதேனும் அணி வாங்க வேண்டும் என்று டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement