இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. இருப்பினும் சமீபத்திய நியூசிலாந்து தொடரில் 3 – 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா முழுமையான ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது.
மேலும் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அத்துடன் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் ஒரு தொடரில் இந்தியா தோல்வியை பதிவு செய்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் அந்த தோல்வியால் தாம் உள்ளிட்ட இந்திய அணியினர் நொறுங்கிப் போனதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
வரலாற்று தோல்வி:
அந்த தோல்விக்கு தாம் சிறப்பாக விளையாடாததும் காரணம் என்று அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அதே சமயம் நியூசிலாந்து பவுலர்கள் தங்களை விட சிறப்பாக பந்து வீசியதே இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்றும் அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் 3 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்துள்ளோம்”
“அவ்வாறு இந்திய அணியின் வரலாற்றில் எப்போதும் நடந்ததில்லை என்று நான் படித்தேன். அதற்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. என்னுடைய கேரியரில் விளையாடிய அனுபவத்தில் நாங்கள் அதிகமான உணர்வை கொண்டிருக்கவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் இந்த தோல்வி நொருங்கக்கூடிய அனுபவமாக இருந்தது”
அஸ்வின் வருத்தம்:
“அதுவே அதற்கான சரியான வார்த்தையாக இருக்கும். அந்த தோல்வியால் 2 – 3 நாட்களாக எப்படி ரியாக்சன் கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் இருந்தேன். என் மீது நான் அதிகமாக எதிர்பார்த்தேன். நானும் அந்த தோல்விக்கு ஒரு காரணமானவன் என்பதை சொல்வேன். அந்த பெரிய தோல்விக்கு நானும் ஒரு காரணமானவன். குறிப்பாக பேட்டிங்கில் லோயர் ஆர்டரில் நான் ரன்களை எடுக்கவில்லை”
இதையும் படிங்க: 143க்கு ஆல் அவுட்.. ஆஸியை சொந்த மண்ணில் ஓடவிட்ட பாகிஸ்தான்.. 22 வருடம் கழித்து வரலாற்று வெற்றி
“அதே போல பந்து வீச்சில் துல்லியமாக செயல்படவில்லை. அந்தத் தொடரின் பல இடங்களில் நான் சிறப்பாக துவங்கினேன். ஆனால் சில இடங்களில் நான் அதைத் தூக்கி எறிந்து விட்டேன். என்னால் முடிந்தளவுக்கு சிறந்துவற்றை கொடுக்க முயற்சித்தேன். ஆனால் அது வெற்றிக்காக போதுமானதாக இல்லை” என்று வருத்தமாக பேசினார். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா மண்ணில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



