- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஈகோ கிடையாது.. பிரச்சனையே பஸ்பால் தான்.. இங்கிலாந்தை கெடுத்த மெக்கல்லமின் பிளானை விளக்கிய அஸ்வின்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து இரண்டாவது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக பர்மிங்கம் மைதானத்தில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்த இங்கிலாந்து முதல் போட்டியிலேயே இந்தியா 7 கேட்ச்களை தவற விடாமல் இருக்கும் பட்சத்தில் மண்ணைக் கவ்வியிருக்கும் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியை பஸ்பால் என்ற பெயரில் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் கெடுத்து வைத்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் சாடியுள்ளார். அதிரடியாக விளையாட வைக்கிறேன் என்ற பெயரில் சூழ்நிலையை கணக்கிடாமல் மெக்கல்லம் வகுத்துள்ள மோசமான திட்டம் பற்றி அஸ்வின் விளக்கியது பின்வருமாறு. “இங்கிலாந்து அணியிடம் எந்த ஈகோவும் இல்லை. பஸ்பால் மட்டுமே அவர்களுடைய முதன்மையான பிரச்சனை”

- Advertisement -

கெடுத்த மெக்கல்லம்:

“பஸ்பால் என்றால் என்ன? அது ப்ரெண்டன் மெக்கல்லம் நியூஸிலாந்து கிரிக்கெட்டின் ஸ்டைலையும் பிட்ச்களையும் இங்கிலாந்தில் புகுத்தியுள்ளதாகும். நியூசிலாந்தில் முதல் நாள் காலையில் பிட்ச்சில் ஈரப்பதம் இருக்கும். அங்கே விக்கெட்டுகள் எடுக்க வேண்டுமெனில் முதல் மணி நேரத்திலிருந்தே நீங்கள் எதிரணியை தாக்க வேண்டும். பின்னர் பிட்ச் ஃபிளாட்டாக மாறும். 5வது நாளின் கடைசி மணி நேரத்தில் கூட அது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக இருக்கும்”

“அங்கே வெற்றி பெற நியூசிலாந்துக்கு நெய்ல் வேக்னர் பவுன்சர்களை போட்டுத் தள்ளுவார். ட்ரெண்ட் போல்ட் ஸ்விங் செய்வார். சௌதீ கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார். ஆனால் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு இடையே இருக்கும் வித்தியாசம் பெரியது. இங்கிலாந்தில் சீம், ஸ்விங் ஆகியவை முக்கிய பங்காற்றும். அதனாலேயே இங்கிலாந்து தங்களது சொந்த மண்ணில் நீண்ட காலமாக டாமினேட் செய்தார்கள்”

- Advertisement -

அஸ்வின் சாடல்:

“ஆம் அவர்கள் அனைத்து போட்டிகளையும் வெல்லவில்லை. ஆனால் ஆண்டர்சன், பிராட் இருந்த வரை பெரும்பாலான போட்டிகளை வென்றனர். தற்போது மெக்கல்லம் இங்கிலாந்தை சுதந்திரமாக விளையாடுமாறு கூறியுள்ளார். அதற்காக அவர் ஃபிளாட்டான பிட்ச்களை கேட்டு வாங்குகிறார். அது 2, 3 கொண்ட தொடர்கள் நடைபெறும் நியூஸிலாந்தில் வேலை செய்யும். ஆனால் பெரும்பாலும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் இங்கிலாந்துக்கு வேலையாகாது”

இதையும் படிங்க: இங்கிலாந்தில் தோத்தாலும் கம்பீரை ஒன்னும் சொல்லாதீங்க.. அவங்க இல்லாமையே ஜெய்ச்சது போதாதா? யோக்ராஜ் பேட்டி

“இங்கிலாந்து அணியின் பவுலிங் அட்டாக் வலுவற்றதாக இருக்கிறது. ஆர்ச்சர் மற்றும் அட்கின்சன் ஆகியோர் வந்ததால் அவர்களுக்கு கொஞ்சம் பல் கிடைத்துள்ளது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 3வது போட்டி ஜூன் 10ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் பும்ரா, ஆர்ச்சர் ஆகியோர் திரும்பியது இரு அணிகளுக்கும் பலமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -