இதனால தான் கோலி மாதிரி கிஸ் கொடுப்பதில்லை.. சச்சின், ரோஹித்தை விட நான் எம்விபி.. அஸ்வின் பேட்டி

R Ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த நம்பிக்கை நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் 38 வயதில் ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரனுக்கு நிகராக அவர் அதிக தொடர்நாயகன் விருதுகளை வென்றுள்ளார். 2012 – 2024 வரை சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருக்க முக்கிய பங்காற்றிய அவர் 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளர் ஆவார்.

மேலும் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 2வது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து அஸ்வின் சாதனை நாயகனாக விடப்பட்டுள்ளார். இந்நிலையில் விராட் கோலி போல மைதானத்தில் இருக்கும் தம்முடைய மனைவிக்கு 5 விக்கெட்டுகளை எடுக்கும் போது காற்றில் முத்தங்களை பறக்க விடுவது தமக்கு பிடிக்காது என அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

அஸ்வின் ஸ்டைல்:

மேலும் சச்சின், கோலி, ரோஹித் போன்றவர்களை விலை மதிப்புமிக்க வீரர்கள் என்று சொல்வது வழக்கம். ஆனால் தம்முடைய கிரிக்கெட்டுக்கும், தனது அம்மா அப்பாவுக்கும் தாம் மதிப்பு மிக்கவன் என்றும் அஸ்வின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் யார் என்பதை அறிந்து கொள்ள மக்கள் விரும்புகிறார்கள்”

“ஏனெனில் பெரும்பாலான நேரங்களில் அஸ்வின் விக்கெட் எடுக்கும் போது விராட் கோலி போல மைதானத்தின் அனைத்து புறங்களிலும் ஓடுவதில்லை. அவர் சாதாரணமாக விக்கெட் எடுத்து விட்டு குதிக்கிறார். அதனால் அஸ்வின் மிகவும் சீரியஸானவர் என்றும் விராட் கோலி ஜாலியானவர் என்றும் மக்கள் நினைக்கிறார்கள். அதனால் நீங்கள் ஏன் எல்லா நேரங்களிலும் சீரியஸாக இருக்கிறீர்கள்? என்றும் என்னிடம் சில கேட்டுள்ளனர்”

- Advertisement -

எனக்கு நான் ராஜா:

“அதற்கான என்னுடைய பதில் என்னவெனில் நான் எப்போதும் சீரியஸான நபர் கிடையாது. என்னுடைய நாட்டுக்காக வெற்றியைக் கொடுக்க விளையாடுவதால் என் மனம் செயல்முறைகளை பின்பற்றிக் கொண்டிருக்கும். அதே போல 5 விக்கெட்டுகளை எடுக்கும் போதெல்லாம் மைதானத்தில் அமர்ந்திருக்கும் என்னுடைய மனைவிக்கு முத்தம் கொடுப்பதையும் நீங்கள் பார்த்திருக்க முடியாது. அதை எனது புத்தகத்தில் புத்தகத்திலிருந்து வெளியே எடுக்க விரும்பினேன்”

இதையும் படிங்க: பாவங்க பஞ்சாப்.. தேவையா இது? ஸ்ரேயாஸின் ரிவர்ஸ் உல்ட்டா பேட்டிங்கால் 67/6 என விழுந்து எஸ்கேப்பான மும்பை

“இந்திய கிரிக்கெட்டில் நிறைய மக்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவை பற்றி பேசுகிறார்கள். நான் வளர்ந்த போது சச்சின் பற்றி நிறைய பேசியுள்ளேன். எனது தந்தை அல்லது அம்மாவுக்கு நான் தான் மிகவும் விலைமதிப்புள்ள வீரர் (எம்விபி). இது ரோகித், கோலி அல்லது வெளியில் உள்ள யாரோ அல்ல. ஏனெனில் ஒவ்வொருவரின் பயணமும் தனித்துவமானது. என்னைப் பொறுத்த வரை எனக்கும் எனது கிரிக்கெட்டுக்கும் நான் விலை மதிப்பு மிக்கவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement