- Advertisement -
ஐ.பி.எல்

சிஎஸ்கே விட்டு நான் போக முடிவு பண்ணல.. ஆனா சிஎஸ்கே அணியிடம் அந்த தெளிவை கேட்டுருக்கேன்.. அஸ்வின் பேட்டி

ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் சிஎஸ்கே கடந்த 2 தொடர்களில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப் பெறவில்லை. அதிலும் கடந்த ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து அவமானத்தைச் சந்தித்தது.

அதனால் சென்னை அணி ஏற்கனவே மூத்த வீரர்களை கழற்றி விட்டு தேவால்ட் பிரேவிஸ், ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சிஎஸ்கே அணியிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியேற முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2010, 2011 கோப்பையை சிஎஸ்கே வெல்ல உதவிய அவர் அதன் பின் பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடினார்.

- Advertisement -

வெளியேற விரும்பல:

இருப்பினும் கடந்த வருடம் 9.75 கோடிகள் என்ற பெரியத் தொகைக்கு சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்ட அவர் சுமாராக விளையாடினார். எனவே வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணியும் அவரை கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த விவகாரம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுவரை சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேற தாம் முடிவெடுக்கவில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார். மேலும் அடுத்த வருடம் தம்மை விளையாட வைக்க விரும்புகிறீர்களா என்ற தெளிவை சிஎஸ்கே அணியிடம் கேட்டுள்ளதாகவும் அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் ராஜஸ்தானுக்கு 3 வருடங்கள் விளையாடினேன்”

- Advertisement -

அஸ்வின் விளக்கம்:

“அங்கே முதல் வருடம் முடிந்ததும் என்னுடைய செயல்பாடுகள் பற்றிய தொகுப்பையும் எதிர்பார்ப்பையும் இமெயில் செய்த ராஜஸ்தான் நிர்வாகம் அடுத்த வருடம் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தை புதுப்பித்ததாக தெரிவித்தார்கள். அப்படி ஒவ்வொரு ஐபிஎல் தொடர் முடிந்த பின்பும் ஒரு வீரரை தொடர்புகொண்டு அவரை தக்க வைக்கிறோமோ அல்லது விடுவிக்கிறோமோ என்பதை தெரிவிப்பது அணி நிர்வாகத்தின் பொறுப்பாகும்”

இதையும் படிங்க: விராட், ரோஹித் தப்பான ஃபார்மட்டில் ரிட்டையரானதால்.. கேரியரே முடியப்போகுது.. ஆகாஷ் சோப்ரா கவலை

“அந்த வகையில் சஞ்சு சாம்சன் அல்லது நான் எங்களுடைய அணியில் தக்க வைக்கப்படுகிறோமா அல்லது விடுவிக்கப்படுகிறோமா என்பதை தெரிந்து கொல்லும் உரிமையைப் பெற்றுள்ளோம். ஒவ்வொரு வீரருக்கும் தெளிவு தேவை. எங்கள் எனது கையில் இல்லையென்றாலும் நான் வருங்காலம் பற்றிய தெளிவை கேட்கிறேன். சாம்சன் பற்றியும் செய்திகள் காணப்படுகின்றன. அது வதந்தியா? அல்லது அணி நிர்வாகத்திடம் இருந்து வரும் செய்தியா? யார் அதை செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அது வீரர்களிடம் இருந்து வரவில்லை” எனக் கூறினார்.

- Advertisement -