விராட், ரோஹித் தப்பான ஃபார்மட்டில் ரிட்டையரானதால்.. கேரியரே முடியப்போகுது.. ஆகாஷ் சோப்ரா கவலை

Aakash Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கையின் நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளார்கள். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட உள்ள அவர்கள் இந்தியாவுக்காக 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பாக அவர்களை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக தேர்வுக்குழுவினர் இப்போதிலிருந்தே இளம் அணியை உருவாக்கி 2027 உலகக் கோப்பையை வெல்ல விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விராட், ரோஹித் தவறான ஃபார்மெட்டில் ஓய்வு பெற்றதால் அவர்களுடைய கேரியர் முன்னதாகவே முடியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கவலைத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

தவறான ஓய்வு:

“அந்த ஜோடி தவறான ஃபார்மெட்டில் விடை பெற்றுள்ளது. திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் விடைபெற்ற விராட், ரோஹித் இனிமேல் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறோம் என்று அறிவித்துள்ளார்கள். அதுவே பிரச்சனை. ஏனெனில் டெஸ்ட் போட்டிகள் இருப்பதிலேயே கடினமானது. பேட்ஸ்மேன்களை பொறுத்த வரை ஒருநாள் போட்டிகள் அழுத்தமற்றது மற்றும் எளிமையானது”

“அதில் நீங்கள் வருடத்திற்கு 6 போட்டிகளில் விளையாடினால் 6 நாட்கள் மட்டுமே விளையாடுவீர்கள். அப்படி 365இல் 6 நாட்கள் மட்டும் விளையாடினால் எப்படி உங்களால் தயாராக முடியும்? எப்படி உத்வேகத்துடன் ஃபிட்டாக நல்ல வடிவத்துடன் இருக்க முடியும்? என்பது என்னுடைய சிந்தனையாகும். அதனால் நீங்கள் ஒருநாள் டி20 போட்டிகளில் விடைபெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும்”

- Advertisement -

நிறைய நாட்கள் கிடைக்காது:

“அதை செய்திருந்தால் இங்கிலாந்தில் 25 நாட்கள் விளையாடி விட்டு அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்களிலும் விளையாடும் வாய்ப்பைப் பெறுவீர்கள். அதற்கிடையே இருக்கும் இடைவெளியில் ரஞ்சிக் கோப்பை மற்றும் கவுண்டி தொடரில் விளையாடலாம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விடைபெற்ற நீங்கள் ரஞ்சி, கவுன்டி தொடரிலும் விளையாடப் போவதில்லை”

“விராட், ரோஹித் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடுவார்கள் என்ற பேச்சுக்கள் காணப்படுகிறது. ஆனால் அத்தொடர் டிசம்பர் நடக்கிறது. அதில் என்ன பயன்? ஐபிஎல் தொடருக்கு முன் இந்தியா 9 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது. அந்த 9 நாட்களில் மட்டும் விளையாடப்போகும் நீங்கள் முழுமையாக பயிற்சி எடுத்து விளையாட மாட்டீர்கள்”

இதையும் படிங்க: தோல்வியால் ரசிகர்கள் விமர்சித்தப்போ.. 2011 உ.கோ ஜெய்க்க சச்சின் இந்த ஆலோசனை கொடுத்தாரு.. யுவ்ராஜ் பேட்டி

“உண்மையில் விராட், ரோஹித் போன்ற ஜாம்பவான்கள் இனிமேல் செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். எனவே விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடினால் வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் வெற்றுப் பேச்சு. அதனால் அவர்கள் ஒருநாள் போட்டிகளை விட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடிவெடுத்திருந்தால் அனைத்தும் எளிதாக இருந்திருக்கலாம்” என்று கூறினார்.

Advertisement