ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடருக்கான ஏலம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. கடந்த வருடம் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற்றது. எனவே இம்முறை ஒருநாள் மட்டுமே நடக்கக்கூடிய சிறிய அளவிலான மினி ஏலம் நடைபெற உள்ளது. அதில் ஒவ்வொரு அணியும் ஓரிரு வீரர்களை மட்டுமே பெரிய தொகை கொடுத்து வாங்க முடியும்.
அது போன்ற சூழ்நிலையில் இம்முறை லக்னோ அணி நிர்வாகம் மயங் யாதவை விடுவிக்கும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். ஏனெனில் மிகப்பெரிய தொகைக்கு தக்க வைக்கப்பட்ட அவர் கடந்த வருடம் காயத்தால் விளையாடாதது லக்னோ அணியின் தோல்விக்கு முக்கிய காரணமானது. மேலும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேமரூன் கிரீன் பெரிய தொகைக்கு விலைப் போவார் என்றும் அஸ்வின் கணித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர்கள்:
அதே போல ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஓவன் அதிக தொகைக்கு விலை போகும் வீரராக இருப்பார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்பறுமாறு. “இந்த மினி ஏலம் இந்திய வீரர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஒரு சில வீரர்கள் மட்டுமே பெரிய தொகைக்கு விலை போவார்கள். ஆனால் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தான் அதிக தொகைக்கு விலை போவார்கள்”
“இம்முறை ஏலத்திற்கு நிறைய ஆஸ்திரேலிய வீரர்கள் வருவார்கள். டிம் டேவிட் ஆர்சிபி அணியுடன் இருக்கிறார். தற்சமயத்தில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்வதால் ஆர்சிபி அணி அவரை விடுவிக்காது. மிட்சேல் ஓவன் பஞ்சாப் அணியில் இருக்கிறார். ஆனால் மாற்று வீரராக வந்த அவர் 2 – 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். எனவே அவரை பஞ்சாப் அணியால் தக்க வைக்க முடியாது”
அஸ்வின் கணிப்பு:
“அதே போல கேமரூன் கிரீன் மீண்டும் ஏலத்திற்கு வருகிறார். அந்த 2 வெளிநாட்டு ஆல் ரவுண்டர்கள் மிகப்பெரிய தொகைக்கு விலை போவார்கள். அது போன்ற வீரர்களை வாங்குவதற்கு நீங்கள் சில வீரர்களை விடுவித்து கையிருப்பு தொகையை அதிகரிக்க வேண்டும். அதன் காரணமாக லக்னோ போன்ற அணிகள் மயங் யாதவ் போன்ற வீரர்களை விடுவிக்கலாம்”
இதையும் படிங்க: சாம்சன் சிஎஸ்கே வருவது கிட்டத்தட்ட உறுதி.. ராஜஸ்தான் – சென்னை, அஸ்வின் கனெக்சன் பற்றி உத்தப்பா பேட்டி
“இந்த மினி ஏலத்தில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்குவதற்கு 25 – 30 கோடிகள் வரை மட்டுமே தொகையாக பெறுவார்கள்” என்று கூறினார். இதற்கிடையே சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் வாங்க முயற்சித்து வருவதாக செய்திகள் காணப்படுகின்றன. அதே போல அஸ்வின் சிஎஸ்கே அணியிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிய வருவது குறிப்பிடத்தக்கது.



