அகர்கர் மாறனும்.. தெளிவா சொல்லிருந்தா ஷமி ஏன் மீடியாவில் உண்மையை சொல்லப் போறாரு? அஸ்வின் பேட்டி

R Ashwin 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2023 உலகக் கோப்பையில் காயத்துடன் பந்து வீசினார். அத்தொடரில் இந்தியா ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதனால் கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரை அவரால் இந்தியாவுக்காக விளையாட முடியவில்லை.

இருப்பினும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடிய அவர் இந்தியா கோப்பையை வெல்ல தம்முடைய பங்காற்றினார். ஆனால் அடுத்ததாக நடைப்பெற்ற இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஷமி முழுமையாக ஃபிட்டாக இல்லை என்று சொல்லி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கழற்றி விட்டார். அப்போது ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய ஷமி உத்தரகாண்டிற்கு எதிராக 7 விக்கெட்டுகள் எடுத்து பெங்காலை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

தெளிவாக சொல்லல:

அதனால் ரஞ்சிக்கோப்பையில் விளையாட ஃபிட்டாக இருக்கும் தம்மால் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட முடியாதா? என்று அவர் கேள்வி எழுப்பினார். அது பற்றி கேட்டதற்கு ஒருவேளை ஷமி ஃபிட்டாக இருந்தால் இந்நேரம் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியின் விமானத்தில் இருந்திருப்பார் என்று அகர்கர் தெரிவித்தார். எனவே தற்போது வரை அவர் ஃபிட்டாக இல்லை என்று அகர்கர் மீண்டும் மறுப்பு தெரிவித்தார்.

அதற்கு ரஞ்சிக் கோப்பையில் 11 மெய்டன் உட்பட 7 விக்கெட்டுகள் எடுத்தது உங்களுடைய கண்முன்னே இருக்கிறது என்று ஷமி மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் ஃபிட்னஸ் பற்றி அவரிடம் அகர்கர் தெளிவாக பேசாததே இந்த பிரச்சனைக்கு காரணம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை மாற்ற தேர்வுக்குழு மாற வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

அஸ்வின் கருத்து:

“இந்திய கிரிக்கெட்டில் அனைத்தும் மறைமுக பேச்சு வார்த்தையில் ஓடுகிறது என்ற விஷயத்தை நான் வெளிப்படையாக சொல்வேன். இது மாற வேண்டும் என்று நான் உண்மையாக விரும்புகிறேன். தேர்வுக்குழு மற்றும் வீரர்கள் ஆகிய இரு தரப்பிடமும் மாற்றம் வேண்டும். ஏனெனில் ஏதேனும் விஷயம் மறைமுகமாக சொல்லப்பட்டால் அது செய்தியாக வெளி வருகிறது”

இதையும் படிங்க: 236 ரன்ஸ்.. 10 விக்கெட்டும் கேட்ச்களாக விழுந்த.. அரிதான போட்டியில் நியூஸிலாந்தை சாய்த்த இங்கிலாந்து

“எடுத்துக்காட்டாக ஷமி என்ன செய்தார் என்று பாருங்கள். களத்தில் அபாரமான செயல்திறனை வெளிப்படுத்திய அவர் பேட்டி கொடுத்தார். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் ஊடகத்துக்கு சென்று ஏன் அவர் பேட்டி கொடுக்கிறார்? ஏனெனில் அவரிடம் தேர்வுக்குழு தெளிவாக எதையும் சொல்லவில்லை. விரைவில் அவரிடம் தொலைபேசியில் பேசுகிறேன் என்று அகர்கர் சொன்னதை நான் விரும்புகிறேன். இந்நேரம் அவரிடம் அகர்கர் பேசியிருப்பார் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement