ஃபைனலுக்கு மும்பை வந்தா சோளி முடிஞ்சுரும்.. ஆர்சிபி அந்த டீம் வரனும்ன்னு வேண்டிக்கோங்க.. அஸ்வின் பேட்டி

R Ashwin
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்கடித்தது. மே 29ஆம் தேதி முள்ளான்பூரில் நடைபெற்ற அப்போட்டியில் பஞ்சாப்பை 101 ரன்களுக்கு சுருட்டிய 10 ஓவரில் 106/2 ரன்களை எடுத்து எளிதாக வென்றது. அதனால் பெங்களூரு இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று சாதனைப் படைத்தது.

அத்துடன் 2009, 2011, 2016க்குப்பின் 4வது முறையாக 9 வருடங்கள் கழித்து ஆர்சிபி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. அதன் காரணமாக இம்முறை ஆர்சிபி கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று பெங்களூரு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்துடன் காணப்படுகிறார்கள். இந்நிலையில் ஃபைனலுக்கு மும்பை மட்டும் வந்து விடக்கூடாது என்று ஆர்சிபி ரசிகர்கள் வேண்டிக்கொள்ள வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

ஃபைனலில் மும்பை வருமா:

ஆர்சிபி ஃபைனலில் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பையை எப்படியாவது குஜராத் வீழ்த்த வேண்டும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். ஏனெனில் வரலாற்றில் இதற்கு முன் கடைசியாக விளையாடிய 5 ஃபைனல் போட்டிகளிலும் மும்பை வெற்றி பெற்றுள்ளதை அஸ்வின் மறைமுகமாக சுட்டி காட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“ஒருவேளை ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டுமெனில் இன்று மும்பைக்கு எதிராக குஜராத் வெல்ல வேண்டும். மும்பை நீங்கள் ஃபைனலுக்குள் வர விரும்பாத ஒரு அணியாகும். அவர்களை எப்படியாவது நீங்கள் நிறுத்தியாக வேண்டும். எனவே மும்பை இந்தியன்ஸ் ஃபைனலுக்கு வரக்கூடாது என்ற எதிர்பார்ப்புடன் ஆர்சிபி இருப்பார்கள். மும்பை மட்டுமே தற்போதைய ஆர்சிபி அணியை வீழ்த்துவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது”

- Advertisement -

அஸ்வின் கருத்து:

“ஆர்சிபி கோப்பைக்கு அருகில் இருப்பதாக தெரிகிறது. ஆனால் கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒருவேளை நான் பெங்களூரு அணியில் இருந்தால் ஃபைனலில் குஜராத்தை எதிர்கொள்வதை விரும்புவேன். விராட் கோலியைப் பற்றி உங்கள் அனைவரிடமும் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். அவருக்கு என்னால் எந்த உதவியும் செய்ய முடியாது”

இதையும் படிங்க: அவரு பந்துல மட்டும் அவுட்டாக கூடாதுனு நெனச்சே விளையாடுனேன் – பிலிப் சால்ட் மகிழ்ச்சி

“ஆனால் இது ஆர்சிபி கோப்பையை வெல்லப்போகும் வருடம் என்று நான் கருதுகிறேன். விராட் கோலி ஐசிசி கோப்பை வெல்லவில்லை. என்ற பேச்சுக்கள் காணப்பட்டன அப்போது ஒரே வருடத்திற்குள் அவர் டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பைகளை அடுத்தடுத்து வென்றார். கண்டிப்பாக அதை கேப்டனாக வெல்லவில்லை என்றாலும் விராட் கோலி சிறந்த டெஸ்ட் கேப்டன். அவர் தன்னுடைய 18வது ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக முதல் கோப்பையை வெல்வாரா? ஃபைனலில் அவர் உயர்ந்து நிற்க வேண்டும். சேசிங் செய்தால் அதை எப்படி சமாளிப்பது என்பது அவருக்குத் தெரியும்” எனக் கூறினார்.

Advertisement