
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்யாசத்தில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. அந்த தோல்விக்கு பேட்டிங்கில் ஃபினிஷிங் செய்யாதது, 7 காட்சிகள் தவற விட்டது முக்கிய காரணமாக அமைந்தது. அதைத் தாண்டி பும்ராவுக்கு மற்ற பவுலர்கள் யாரும் உதவி செய்யாததும் தோல்விக்கு வித்திட்டது.
குறிப்பாக இரண்டாவது அதிக அனுபவத்தைக் கொண்டுள்ள முகமது சிராஜ் விக்கெட்டுகள் எடுப்பதற்கு பதிலாக ரன்களை வாரி வழங்கி இந்தியாவுக்கு பின்னடைவைக் கொடுத்தார். இந்நிலையில் முகமது சிராஜ் விக்கெட் எடுக்கா விட்டாலும் பரவாயில்லை ரன்களை வழங்கக் கூடாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கோபமான அறிவுரை வழங்கியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அஸ்வின் பேசியது பின்வருமாறு.
“சிராஜிடம் என்னுடைய ஒரே கேள்வி என்னவெனில் உங்களைல் ரன்கள் கொடுப்பதைக் குறைக்க முடியாதா? நீங்கள் விக்கெட்டுகளை கூட எடுக்க வேண்டாம். ஆனால் நீங்கள் 4 – 5 ரன்களை கொடுப்பதால் பும்ராவை மீண்டும் பவுலிங் செய்ய வைக்க வேண்டியுள்ளது. இப்படி செயல்பட்டால் எப்படி பும்ராவால் அழுத்தத்தை உருவாக்க முடியும்? அவரையும் எதிரணியினர் சமாளித்து களைப்படைய வைக்கிறார்கள்”
“பிரசித் கிருஷ்ணா முதல் முறையாக விளையாடுவதால் அனுபவமற்றவராக இருக்கிறார். அதனால் ரன்களை கட்டுப்படுத்துவதற்காக நீங்கள் ஜடேஜாவிடம் செல்ல வேண்டியுள்ளது. எனவே சிராஜ் ஓரளவு அசத்தினால் போதும். மோர்னே மோர்கெல் 20 ஓவரில் 2/43 என்ற வகையில் பவுலிங் செய்தது உங்களுக்கு நினைவு இருக்கிறதா? அதே போலத்தான் சிராஜ் பவுலிங் செய்ய வேண்டும்”
“பஸ்பால் என்ற பெயரில் இங்கிலாந்து அதிரடியாக விளையாடுகிறது. எனவே நீங்கள் 58 ரன்களை ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தாலும் பரவாயில்லை. இந்த வகையில் சிராஜ் தாக்கத்தை ஏற்படுத்தினால் வெற்றியில் பெரிய வித்தியாசத்தை உண்டாக்க முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் எடுப்பது முக்கியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் ஒருவரையொருவர் சார்ந்து பௌலிங் செய்ய வேண்டும்”
இதையும் படிங்க: 2024 ஃபைனலில் பீதியாகிட்டேன்.. விராட் மாதிரி அவர் இல்லனா ஸ்பெஷல் வெற்றி கிடைசுருக்காது.. ரோஹித் பேட்டி
“இஷாந்த் சர்மா, மோர்னே மோர்கெல் அதை அற்புதமாக செய்தவர்கள். மொத்த நாளிலும் அவர்கள் ஒருபுறம் பிடித்து 40 ரன்கள் மட்டுமே கொடுப்பார்கள். சிராஜ் விக்கெட்டுகளை எடுக்கா விட்டாலும் ரன்கள் கொடுப்பதை குறைக்க வேண்டும். இப்படி பொறுப்புடன் விளையாடி பும்ராவுக்கு ஆதரவையும் புதிதாக வந்துள்ள கிருஷ்ணாவுக்கு பாதுகாப்பையும் கொடுங்கள். அதை விட்டு தொடர்ந்து இப்படியே பவுலிங் செய்தால் பிரசித் கிருஷ்ணாவும் ரன்களை விடுவார்” எனக் கூறினார்