சர்வதேச டி20 போட்டிகளில் அசத்தலான சாதனையை நிகழ்த்தி அசத்திய குவிண்டன் டி காக் – விவரம் இதோ

Quinton De Kock
- Advertisement -

எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க டி20 அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி நேற்று ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

குவிண்டன் டி காக் நிகழ்த்திய அசத்தல் சாதனை :

அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு தென்னாப்பிரிக்க அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த மிகப்பெரிய இலக்கினை அதிரடியாக துரத்திய தென்னாப்பிரிக்கா அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 225 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக குவிண்டன் டி காக் 49 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர் என 115 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் குறிப்பிட்ட ஒரு முக்கிய சாதனை ஒன்றினையும் நிகழ்த்தி அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : கடந்த 2012-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 101 ஆட்டங்களில் விளையாடி 2 சதம் மற்றும் 18 அரைசதம் என 2886 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : உன்ன நான் ரெடி பண்றதுக்கு காரணமே இதுதான்.. சொல்லி சொல்லி வளர்த்த யுவ்ராஜ் சிங் – அவரே கூறிய தகவல்

இவ்வேளையில் நேற்றைய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டி டி20 போட்டிகளில் அவரது நூறாவது இன்னிங்ஸ்சாக அமைந்தது. இப்படி 100-ஆவது இன்னிங்சில் விளையாடிய அவர் சதம் அடித்ததன் மூலம் டி20 போட்டிகளில் நூறாவது இன்னிங்சில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement