வித்தியாசமான முறையில் விக்கெட்டை இழந்து பரிதாபமாக வெளியேறிய டிகாக் – இப்படியா அவுட் ஆவீங்க

Dekock
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12-சுற்று போட்டிகள் நேற்றிலிருந்து ஆரம்பமானது. நேற்றைய முதல் போட்டியில் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்க அணியை நிலைகுலைய வைத்தனர்.

இந்த போட்டியின் துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை மட்டுமே அடித்தது. பின்னர் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரான டி காக் 12 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் எடுத்த நிலையில் பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார். அதிலும் அவர் ஆட்டமிழந்த விதமானது தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

அதன்படி ஹேசல்வுட் வீசிய 5-வது ஓவரில் பந்தினை பின்பக்கமாக ஸ்வீப் செய்ய முயன்ற டி காக் பந்தினை கணிக்க முடியாமல் தனது உடம்பின் மீது பந்தை வாங்கினார். பந்து தன்னை தாக்கியதும் எங்கே போனது என்று தெரியாமல் டி காக் பார்த்துக் கொண்டிருக்க அவரின் உடம்பின் மீது பட்ட அந்த பந்து நேராக ஸ்டம்பிற்கு சென்று செல்லமாக தட்டியது.

அதனை கவனித்த அவரால் அந்த பந்தினை தடுக்க முடியவில்லை. தான் ஆட்டமிழந்ததை நம்ப முடியாமல் வேடிக்கையாக பார்த்த டி காக் இறுதியில் வருத்தத்துடன் வெளியே சென்றார். அவரது இந்த விக்கெட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement