ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11வது சீசன் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.ஏற்கனவே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள நிலையில் ஐபிஎல்-இல் பங்கேற்கும் அணிகளும் அணிவீரர்களும் வெற்றிபெரும் முனைப்புடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் அணி தனது அணிக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்தியது.கென்ட் ஆர்.ஓ நிறுவனம் பஞ்சாப் அணியின் டைட்டில் ஸ்பான்சராக ரூபாய் 16கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவப்பு மற்றும் சில்வர் கலரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜெர்சியின் முன்புறத்தில் டைட்டில் ஸ்பான்சரான கென்ட் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.ஜெர்சியின் இடதுபுறத்தில் அணியின் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது.
அஸ்வினின் தலைமையில் இந்தாண்டு களமிறங்கவுள்ள பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெரும் என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அணிஉரிமையாளர்கள் மற்றும் வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.