அறிமுகப்போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பவுலரை ஒப்பந்தம் செய்த பஞ்சாப் – சூப்பர் செலக்ஷன் தான்

KXIP
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய 14-வது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா வைரஸ் காரணமாக 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன. இதற்காக ஐபிஎல் அணிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்க துவங்கிவிட்டனர்.

IPL

- Advertisement -

இந்நிலையில் இந்த எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரில் சில வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல அணிகள் பின்னடைவை சந்திக்க உள்ளது. அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடி வந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ரிலே மெரிடித் மற்றும் ஜெய் ரிச்சர்ட்சன் ஆகியோர் காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது பின்னடைவை சந்தித்துள்ள பஞ்சாப் அணி அவர்களின் இடத்தை நிரப்பும் வகையில் அண்மையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் உடன் கைகோர்த்துள்ளது. பிக்பேஷ் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் சமீபத்தில் ஆஸ்திரேலிய டி20 அணியில் இடம் பிடித்து தனது அறிமுக போட்டியிலேயே வங்கதேச அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ellis 1

அதுமட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் அவர் ஆஸ்திரேலிய அணிக்காக ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பஞ்சாப் அணி நிச்சயம் சரியான ஒரு நபரை தேர்ந்தெடுத்துள்ளது.

Advertisement