- Advertisement -
இந்திய கிரிக்கெட்

100 மில்லி 80 ரூபாய்.. 2வது டெஸ்டில் இந்திய ரசிகர்களுக்கு நேர்ந்த சோகத்தால் போராட்டம்.. வெளியான அறிவிப்பு

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் இந்தியா தோற்றது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி அக்டோபர் 24ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நகரில் துவங்கியது.

அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியை இந்தியா 259 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக டேவோன் கான்வே 76, ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் எடுத்தனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் 7, ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

ரசிகர்களுக்கு நேர்ந்த சோகம்:

பின்னர் விளையாடும் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா டக் அவுட்டான நிலையில் ஜெய்ஸ்வால் 6, சுப்மன் கில் 10* ரன்களுடன் களத்தில் உள்ளனர். அதனால் முதல் நாள் முடிவில் 16-1 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இப்போட்டியில் வென்று நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய போராட உள்ளது. முன்னதாக இப்போட்டி நடைபெற்ற புனே மைதானத்தில் முதல் நாள் 18000 மேற்பட்ட ரசிகர்கள் கூடி இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

போட்டி துவங்கிய ஒரு மணி நேரத்திற்கு பின் தாகம் ஏற்பட்டதால் அவர்கள் தண்ணீர் பருகுவதற்கு சென்றுள்ளனர். ஆனால் புனே மைதானத்தில் இலவச குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் வரவில்லை. அதனால் மைதான நிர்வாகத்திடம் ரசிகர்கள் விசாரித்த போது போக்குவரத்து நெரிசலில் குடிநீர் லாரிகள் சிக்கியதால் இன்னும் தண்ணீர் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

காசுக்கு தண்ணீர்:

அதன் காரணமாக ஏமாற்றமடைந்த ரசிகர்கள் மைதானங்களில் உள்ள கடைகளில் நீர் வாங்க சென்றுள்ளனர். அங்கே 100 மில்லி 80 ரூபாய் வீதம் தண்ணீர் விற்கப்பட்டது. இத்தனைக்கும் இந்தியாவில் நடைபெறும் அனைத்து மைதானங்களில் சர்வதேச போட்டிகளிலும் ரசிகர்களுக்கு இலவச குடிநீர் வழங்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதை மீறி புனே நிர்வாகம் நடந்து கொண்டதால் பொறுமையிழந்த ரசிகர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதையும் படிங்க: புனேவில் வரலாற்று சாதனை.. அஸ்வின் சாதனையை சமன் செய்த சுந்தர்.. ஒற்றை வரியில் பாராட்டிய சச்சின்

அது பற்றி சமூக வலைதளங்களிலும் விமர்சிக்கப்பட்ட நிலையில் சில மணி நேரங்களுக்கு பின் தண்ணீர் வந்து பிரச்சனை தீர்ந்தது. இந்நிலையில் போக்குவரத்து தண்ணீர் லாரிகள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக மகாராஷ்டிரா வாரியத்தின் செயலாளர் கமலேஷ் பிசால் தெரிவித்துள்ளார். அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் அறிவித்துள்ள அவர் நாளையிலிருந்து குடிநீர் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

- Advertisement -