புனேவில் வரலாற்று சாதனை.. அஸ்வின் சாதனையை சமன் செய்த சுந்தர்.. ஒற்றை வரியில் பாராட்டிய சச்சின்

Washington Sundar 3
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி புனே நகரில் துவங்கியது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்திடம் 36 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் தோற்றது. அதனால் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்சில் 259 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவோன் கான்வே 76, ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் எடுத்ததால் அந்த அணி 204-6 என ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்தது. ஆனால் பின்னர் அபாரமாக பந்து வீசி அந்த அணியை சுருட்டிய இந்தியாவுக்கு தமிழக வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் 3, வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர்.

- Advertisement -

அஸ்வினுக்கு நிகராக:

பின்னர் விளையாடும் இந்தியா முதல் நாள் முடிவில் 16-1 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா டக் அவுட்டான இந்திய அணிக்கு களத்தில் ஜெய்ஸ்வால் 6*, சுப்மன் கில் 10* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் தேர்வாகாத வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. அந்த ஆச்சரியத்திற்குள் நேரடியாக பிளேயிங் லெவனிலும் வாய்ப்பு பெற்ற அவர் 45 மாதங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார்.

அந்த வாய்ப்பில் அற்புதமாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் 59 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகள் எடுத்து நியூசிலாந்தை சுருட்ட முக்கிய பங்காற்றினர். இதன் வாயிலாக புனே மைதானத்தில் டெஸ்ட் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அத்துடன் 7/59 என்பதே 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வினுடைய சிறந்த பந்து வீச்சாகும்.

- Advertisement -

சச்சின் வாழ்த்து:

அதை வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய ஐந்தாவது போட்டியிலேயே சமன் செய்துள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3வது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய வீரர் என்ற அஸ்வின் சாதனையும் அவர் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. எஸ் வெங்கட்ராகவன்: 8/72 (1965)
2. எரப்பள்ளி பிரசன்னா: 8/76 (1975)
3. ரவிச்சந்திரன் அஸ்வின்: 7/59 (2017)
3. வாஷிங்டன் சுந்தர்: 7/59 (2024)*

இதையும் படிங்க: கரியை பூசிய சுந்தர்.. காலையில் விமர்சித்து விட்டு மாலையில் தமிழக வீரரின் தேர்வை பாராட்டிய கவாஸ்கர்

அதனால் தன்னுடைய தேர்வு பற்றி விமர்சித்த சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களுக்கும் சுந்தர் பதிலடி கொடுத்தார். அவருக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து பின்வருமாறு. “சுந்தர் (அழகான) பவுலிங் வாஷிங்டன். இப்படியே தொடர்ந்து செல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement