உங்க சொந்த மைதானமா எங்க ஊருக்கு வந்து விளையாடுங்க.. சாம்பியன் ஆர்.சி.பி வந்துள்ள அழைப்பு – விவரம் இதோ

RCB
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாமல் இருந்து வந்தது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்து வந்தது.

ஆர்.சி.பி அணிக்கு அழைப்பு விடுத்த : புனே மைதானம்

இவ்வேளையில் இந்த 18 ஆண்டுகால சோகத்தை போக்கும் வகையில் 2025 ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்.சி.பி அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் வெற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்படி நீண்ட ஆண்டுகள் காத்திருப்பதற்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றி ஆர்.சி.பி வீரர்கள் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 4-ஆம் தேதி தங்களது வெற்றி பேரணியை பெங்களூரில் நடத்திய போது சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலியானார்கள். இதன் காரணமாக அடுத்த ஆண்டு 2026 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறும் 2026 ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணியானது தங்களது சொந்த மைதானமாக வேறொரு மைதானத்திற்கு நகர்ந்து அந்த மைதானத்தையே தேர்வு செய்ய முடியும். அந்த வகையில் திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், தர்மசாலா, நவி மும்பை, புனே, கான்பூர் ஆகிய மைதானங்களில் ஒன்றை தேர்வு அந்த அணியின் நிர்வாகம் தேர்வு செய்யலாம் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் சாம்பியன் அணியான ஆர்.சி.பி அணியை தங்களது மைதானத்திற்கு வந்து போட்டிகளை நடத்திக் கொள்ளுமாறு மராட்டிய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது :

இதையும் படிங்க : அவருக்கு 23 கோடிலாம் ரொம்ப அதிகம்.. அவரை டீமை விட்டு வெளிய அனுப்புங்க – ஆரோன் பின்ச் கருத்து

ஆர்.சி.பி அணி புதிய மைதானத்தை தேர்ந்தெடுக்கும் வேளையில் தங்களது சொந்த மைதானமாக புனே மைதானத்தை கணக்கில் கொண்டு அடுத்த ஆண்டு முழுவதும் போட்டிகளை நடத்திக் கொள்ளலாம் என்று வெளிப்படையாகவே விருப்பத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement