நான் பவர் ஹிட்டர் இல்லாதான். ஆனா இவங்க 2 பேரையும் நான் கற்றுக்கொள்வேன் – புஜாரா நம்பிக்கை

Pujara

புஜாரா என்றாலே டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் தான் சரியான வீரர் என்கிற பிம்பம் பல வருடங்களாக இருந்து வந்தது. புஜாராவால் அதிரடியாக ஆட முடியாது, அவரால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பவர் ஷாட்டுகளை அடித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இயலாது என்று சில ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது. இதன் காரணமாகவே,கடந்த சில ஐபிஎல் தொடர்களில் எந்த அணியும் அவரை எடுத்துக் கொள்ளவில்லை.

pujara 2

ஆனால் அதையெல்லாம் உடைத்தெறியும் வண்ணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு நடைபெற்ற இடத்தில் 50 லட்சம் ரூபாய்க்கு புஜாராவை அடிப்படை விலைக்கு வாங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட உள்ள புஜாரா, அண்மையில் தான் எப்படி தயாராகிக் கொண்டு வருகிறார் என்று கூறியுள்ளார். என்னால் டி20 போட்டிகளில் அதிரடியாக ஆட முடியாது. டி20 போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட் மிக மிக முக்கியம் அது எனக்கு நன்றாக தெரியும்.

ஆனால் டி20 போட்டிகளில் மிகச் சரியான விதத்தில் விளையாடினால் அணிக்கு தேவையான ரன்களை ஒரு வீரரால் கொடுக்க முடியும். அதற்கு மிக மிக எடுத்துக்காட்டு கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆவார்கள். அவர்களும் தொடக்கத்தில் சாதாரண பேட்ஸ்மேனாக வந்து இன்று 3 தரப்பட்ட பார்மேட்டிலும் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். நானும் அவர்களைப் போலவே என்னை மாற்றிக் கொள்வேன்.

pujara 1

மேலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை நான் பார்த்து வருகிறேன். அவர்களிடமிருந்து பந்தை எவ்வாறு டைமிங் செய்து அடிப்பது என்பது குறித்து நான் கற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளார். தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த நான் ஒரு சில சமயங்களில் டி20 தொடரில் ஆடினேன். அப்போது நான் சரியான வகையில் ஆடாத காரணத்தினால் புறக்கணிக்கப்பட்டேன். அதில் அதிலிருந்து நான் எனது தவறை படிப்படியாக திருத்திக் கொண்டேன். ராகுல் டிராவிட் எனக்கு நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

rohith

எப்பொழுதும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும், புது புது ஷாட்டுகளை அவ்வப்போது படித்து நம்மை மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். அவர் கூறியவாறு டெஸ்ட் போட்டிகளில் என்னை நான் திருத்திக் கொண்டேன். தற்பொழுது டி20 போட்டியிலும் ஆட்டத்திற்கு ஏற்ப என்னை நான் திருத்திக் கொள்வேன் இவ்வாறு இறுதியாக புஜாரா கூறினார்.