நான் சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சி. ஆனா இவர் விளையாடாதது ரொம்ப கஷ்டமா இருக்கு – புஜாரா பேட்டி

Pujara
- Advertisement -

யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணியால் புஜாரா வாங்கப்பட்டார். புஜாரா டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் தான் சரியானவர் என்று பல காலமாக இருந்த எண்ணத்தை உடைக்கும் அளவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50 லட்சம் கொடுத்து வாங்கியது. இந்நிலையில் இந்த ஆண்டு சென்னை அணிக்காக ஆட மிக சிறப்பான வகையில் தன்னை தயார்படுத்திக் கொண்டு வருவதாக புஜாரா அண்மையில் பேட்டி அளித்துள்ளார்.

pujara 1

இந்திய அணியில் சில காலமாகவே ஐபிஎல் போட்டியில் பங்கேற்காத வீரர் என்றால் அது நான் தான் என்றும், மேலும் தற்பொழுது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அதுவும் தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவது மிக மிக மகிழ்ச்சி என்றும் புஜாரா கூறியுள்ளார். இந்திய அணியில் சரியாக விளையாடுவதற்கு கிடைத்த பரிசாக நான் எதிர்பார்க்கிறேன். இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் நான் சிறந்த வகையில் பங்களிப்பை அதற்கு தகுந்த பயிற்சிகளை நான் மேற்கொண்டு வருகிறேன் என்று புஜாரா கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் பேசிய புஜாரா, இந்திய அணிக்காக டெஸ்ட் தொடர்களில் ஹனுமா விஹாரி மிக சிறப்பாக பங்களித்தார். அவர் திறமையான பேட்ஸ்மேன் ஆவார். இருப்பினும் அவருக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக வாய்ப்பு சரியான வகையில் கிடைப்பதில்லை. இந்த ஆண்டு அவரை ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் வாங்கிக் கொள்ளாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது. திறமையான பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்புகள் என்பது சரியான வண்ணம் அமைய வேண்டும் என்றும் புஜாரா கூறியுள்ளார்.

pujara 2

ஹனும விஹாரி கடைசியாக 2019ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு டெல்லி அணியால் கைவிடப்பட்டார். இந்தாண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஏதேனும் ஒரு அணிக்கு விலை போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த அணியும் வாங்கிக் கொள்ள வில்லை. இதன் காரணமாகவே புஜாரா அவருக்கு ஆறுதலாக பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vihari

இதுவரை மொத்தமாக 23 போட்டிகளில் விளையாடியுள்ள விஹாரி மொத்தமாக 284 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஆவரேஜ் 14.2 மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 88.47 ஆகும்.

Advertisement