நான் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர்னா அது இவர்தான் – இந்திய வீரர் புஜாரா கருத்து

Pujara
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி அனுபவ வீரரான சத்தீஷ்வர் புஜாரா கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை இந்திய அணிக்காக 98 போட்டிகளில் விளையாடி 7000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இதில் 19 சதங்களும், 34 அரை சதங்களும் அடங்கும். அதுமட்டுமின்றி உள்ளூர் கிரிக்கெட் மற்றும் கவுன்டி கிரிக்கெட் என நல்ல அனுபவத்தை தன்வசம் கொண்டுள்ளார்.

Pujara 1

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை ராகுல் டிராவிட் விட்டுச் சென்ற இடத்தில் கணக்கச்சிதமாக தன்னை பொருத்திக் கொண்ட புஜாரா டிராவிடை போலவே மிகவும் பொறுப்பான இன்னிங்ஸை விளையாடுவதில் கில்லாடி. இந்திய அணிக்காக பல போட்டிகளில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் தனது சிறப்பான செயல்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் அவர் பேட்டிங்கில் சிறந்த டெக்னிக்கை கொண்டுள்ளார். இந்தியா மட்டுமின்றி எந்த நாட்டில் விளையாடினாலும் மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவர் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய பாராட்டினை பெற்றுள்ளார்.

எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக தீவிரமாக தயாராகி வரும் புஜாராவிடம் தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த பேட்டியில் அவர் எதிர்கொண்ட கடினமான பவுலர் யார்? எப்போதெல்லாம் நீங்கள் கோபப்படுவீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

- Advertisement -

அதற்கு பதில் அளித்த புஜாரா கூறுகையில் : எனக்கும் கோபம் வரும். நான் எப்போதெல்லாம் ஆட்டமிழந்து வெளியேறுகிறானோ அப்போதெல்லாம் உச்சகட்ட கோபம் அடைவேன். ஒவ்வொரு முறையும் நான் ஆட்டம் இழந்து வெளியேறும் போதும் எனக்கு கடுமையான கோபம் வரும் என்று புஜாரா தெரிவித்தார்.

இதையும் படிங்க : அதிகாலையில் சூர்யகுமார் உள்ளிட்ட இந்திய அணியினரும் கோவிலில் கூட்டு பிரார்த்தனை – யாருக்காக எதற்காக தெரியுமா?

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : என்னுடைய கரியரில் நான் எதிர்கொண்ட மிகக் கடினமான பவுலர் என்றால் அது ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று வெளிப்படையாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

Advertisement