ஐ.பி.எல் தான் ஏலம் போகாதது குறித்து வாய் திறந்த சத்தீஸ்வர் புஜாரா – விவரம் இதோ

Pujara

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

auction-1

இந்நிலையில் இந்த தொடர் குறித்த கருத்துக்களை பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் தொடர்ந்து அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னணி வீரரான சதீஷ்வர் புஜாராவும் ஐபிஎல் ஏலம் குறித்த தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக வலம் வரும் 32 வயதான புஜாரா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியில் இருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.

மேலும் டெஸ்ட் தொடர்களில் மட்டும் அவர் பிரதானமான வீரராக இந்திய அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் தான் விலைபோகாத இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது : ஐபிஎல் ஏலம் யூகங்களும், தந்திரங்கள் நிறைந்தது என்பதை அறிவேன். உலகத்தரம் வாய்ந்த வீரரான அம்லா கூட ஐபிஎல் தொடரில் விலை போகவில்லை.

Cheteshwar Pujara

ஐ.பி.எல் போட்டிகளில் சிறந்த வீரர்கள் பலர் விடுபட்டு உள்ளனர். அதனால் என்னை ஏலம் எடுக்காதற்காக ஐபிஎல் ஏலம் முறையில் மீது எனக்கு வருத்தமோ, பிரச்சனையோ எதுவும் இருந்ததில்லை. புஜாரா ஒரு டெஸ்ட் வீரர் என முத்திரை குத்தி விட்டனர் வாய்ப்பு அளிக்கப் பட்டால் வெள்ளை நிறத்திலும் எனது திறமையை காட்ட முடியும்.

- Advertisement -

pujarashot

உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 54 ரன்கள் அடித்துள்ளேன். சயத் முஷ்டாக் அலி டி20 தொடரிலும் சதம் அடித்து இருக்கிறேன். மூன்று வடிவங்களிலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.