ஐ.பி.எல் தொடரில் இந்த டீம் என்னை ஏலம் எடுக்காததை நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டேன் – மனம்திறந்த புஜாரா

Pujara
- Advertisement -

இந்தியாவில் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவித்த உடனேயே ரசிகர்கள் பெருமளவில் இந்த தொடருக்கான வரவேற்பினை அளித்து வருகின்றனர். மேலும் நாட்கள் நெருங்க நெருங்க ஐபிஎல் தொடர் குறித்த சுவாரஷ்ய தகவல்கள் இணையத்தில் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

ipl

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்காக 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விளையாட வந்துள்ள புஜாரா தனது ஐபிஎல் அனுபவம் குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 50 லட்சம் (5000000) என்ற அடிப்படை விலையில் ஏலம் எடுக்கப்பட்டுள்ள புஜாரா டெஸ்ட் வீரர் என்பதால் சிஎஸ்கே அணியில் ஆடும் லெவனில் இடம் பிடிப்பாரா ? அவரது ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தன்னுடைய ஐபிஎல் பயணம் குறித்து பேசிய அவர் கூறுகையில்: 2016 – 17 ஆம் ஆண்டில் நான் குஜராத் அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் என்னை அந்த அணி தேர்வு செய்யவில்லை. அதனால் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன் மேலும் என்னுடைய தேர்வு எனது கட்டுப்பாட்டில் இல்லை. நான் குஜராத் பணியின் ஒரு பகுதியாக இருந்து இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.

pujara 1

ஆனால் அப்போது எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் நான் சென்னை அணிக்காக விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சி. உலகின் தலைசிறந்த ஒரு தொடரில் நான் விளையாட இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என புஜாரா கூறினார்.

pujara 2

2010ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அறிமுகமாகிய புஜாரா 2011ல் இருந்து 13 வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். கடைசியாக 2014 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவர் பிறகு ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் வாய்ப்பு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement