ஒருநாள் முழுவதும் நான் நின்று விளையாடினாலும் என்னை அவுட் ஆக்க முடியாததற்கு காரணம் இதுதான் – புஜாரா ஓபன் டாக்

Pujara
- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன புஜாரா களத்தில் நீண்ட நேரம் நின்று ஆடக் கூடிய திறமை படைத்தவர். இந்திய அணியில் ராகுல் டிராவிட்டுக்கு பின்னர் எதிரணி வீரர்களின் பந்துவீச்சாளர்களை சோதிக்கும் வீரராக இவர் நிலைத்து நின்று ஆடுகிறார். மேலும் டிராவிடின் ஓய்வுக்குப் பிறகு அவரது இடத்தை நிரப்ப சரியான ஆள் என்று கண்டெடுக்கப்பட்ட புஜாரா இதுவரை சிறப்பாக விளையாடி வருகிறார்.

pujarashot

- Advertisement -

மேலும் எவ்வளவுதான் எதிரணி பந்துவீச்சாளர்கள் முயன்றாலும் இவரை வீழ்த்துவது என்பது கடினமான விடயமாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது தான் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடுவது குறித்தும், தன்னை வீழ்த்த முடியாமல் பந்துவீச்சாளர்கள் திணறுவது குறித்தும் அவர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

நாம் பேட்டிங் செய்ய மைதானத்திற்கு வந்ததும் எதிரணி வீரர்களின் கிண்டலுக்கு ஆளாக நேரிடும் ஒருமுறை நிலைத்து நின்று விட்டால் பந்துவீச்சாளர்கள் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். எப்படியாவது ஆட்டமிழக்கச் செய்து விட வேண்டும் என சீண்டுவார்கள் அப்படி அவர்கள் சீண்டும் போது நாம் சோர்ந்து விட்டால் அவர்கள் அதை சாதகமாக்கி நமது விக்கெட்டை வீழ்த்திவிடுவார்கள்.

Pujara

அதுபோன்ற நேரங்களில் நான் முடிந்தவரை அவர்களது செயல்பாடுகளை கண்டுகொள்ளாமல் இருக்க முயற்சிப்பேன். நமது வேலை அணிக்காக சிறப்பாக விளையாடுவது மட்டுமே. அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்பதை மனதில் வைத்து எதிரணி வீரர்களின் சீண்டலை கண்டு கொள்ளாமல் நாம் விளையாட வேண்டும் ஒருவேளை அவர்களது சீண்டல்களை நாம் கவனத்தில் கொண்டு வந்தால் அது ஆட்டத்தை சீர்குலைத்து விடும்.

- Advertisement -

இப்படி எதிரணி வீரர்கள் வைத்த பொறியில் நான் ஒருபோதும் சிக்கியதில்லை என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் : சரியான மனநிலையில் கிரிக்கெட் ஆடுவது மிகவும் முக்கியம். சில சந்தர்ப்பங்களில் கவர் டிரைவ் போன்ற ஷாட்டைகளை ஆடும் போது நமக்கு கூடுதல் நம்பிக்கை கிடைக்கும். பேட்டின் நடுப்பகுதியில் பந்துகளை சந்தித்து ஆரம்பித்தால் அது நமக்கு கூடுதல் பலம் அதன் மூலம் நீண்ட நேரம் நிலைத்து விளையாட நம் மனநிலை தூண்டும்.

Cheteshwar Pujara

இதன்மூலம் நமக்கு ஒரு புது நம்பிக்கை பிறக்கும் என்றும் புஜாரா கூறினார். 2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் அணியில் அறிமுகமான புஜாரா இதுவரை 77 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,840 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement