நல்லவேளை ரஹானே மாதிரி காணாம போயிடுவாரோன்னு நெனைச்சோம் – அரைசதம் அடித்து தப்பிய இந்திய வீரர்

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது முதல் நான்கு போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதனை தொடர்ந்து ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக அந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டதால் தற்போது பல மாதங்கள் கழித்து தற்போது ஜூலை ஒன்றாம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

Jasprit Bumrah Team India

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்கனவே சுமாரான பார்ம் காரணமாக அதிக அளவு விமர்சிக்கப்பட்டு வந்த ரஹானேவுக்கு இடம் கிடைக்கவில்லை. அதே வேளையில் அவருடன் சேர்த்து பேசப்பட்ட புஜாரா ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்ற போது இங்கிலாந்து வந்து கவுண்டி அணியில் பங்கேற்று விளையாடி சதங்களாக அடித்து இழந்த தனது பார்வை மீட்டெடுத்தார்.

அதன் காரணமாக அவருக்கு இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தொடரில் அவர் தனது திறனை நிரூபிக்காத பட்சத்தில் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்ட வேளையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் துவக்க வீரராக களமிறங்கி 13 ரன்கள் மட்டுமே அடித்தார்.

Pujara 1

ஆனாலும் புஜாரா இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்து விளையாடி முக்கியமான நேரத்தில் அரைசதம் அடித்து தனது இடத்தை உறுதி செய்துள்ளார். இரண்டாவது இன்னிங்ஸில் 168 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டர்களுடன் 66 ரன்கள் குவித்து மீண்டும் ஒரு அரை சதம் அடிக்கவே தற்போது தனது இடத்தை தற்காலிகமாக காப்பாற்றிக் கொண்டார் என்று கூற வேண்டும்.

- Advertisement -

இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா ஒரு டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேன் என்பதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி வருகிறார். தனது கரியரின் இறுதி கட்டத்தில் இருக்கும் இவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாக அமையும் பட்சத்தில் அவரது இடத்தை பிடிக்க பல இளம் வீரர்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் முடிவுக்கு வந்த 2 இந்திய சீனியர் வீரர்களின் கரியர் – மாற்று வீரர்களும் கிடைச்சாச்சு

இந்நிலையில் அவர் அடித்த இந்த அரை சதத்தின் மூலம் இன்னும் சில போட்டிகளில் அவர் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இனிவரும் போட்டிகளில் அவர் சொதப்பும் பட்சத்தில் வெகுவிரைவாகவே ரகானே போன்று அவரும் இந்திய டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழக்கும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement