டெஸ்ட் கிரிக்கெட்டில் முடிவுக்கு வந்த 2 இந்திய சீனியர் வீரர்களின் கரியர் – மாற்று வீரர்களும் கிடைச்சாச்சு

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது தற்போது இங்கிலாந்து நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் பங்கேற்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்காத இரண்டு சீனியர் வீரர்களுக்கு இந்த தொடருடன் அனைத்து வகையான வாய்ப்பும் பறிபோக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

rahane

- Advertisement -

அதன்படி இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வந்த முன்னணி பேட்ஸ்மேன் ரகானே மற்றும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் ரன் குவிக்காத ரஹானே ரஞ்சிக்கோப்பையில் தனது திறமையை நிரூபித்தால் மட்டுமே இந்திய அணியில் மீண்டும் இடம் என்று கங்குலி திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஆனாலும் ரஞ்சிக்கோப்பையில் ரகானே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறவே அவருக்கு இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதேவேளையில் புஜாரா இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் மீண்டும் அணிக்கு திரும்பினார். ரஹானேவால் பழைய பார்மிற்கு திரும்ப முடியவில்லை என்கிற காரணத்தினால் அவர் ஓரங்கட்டப்பட்டார்.

ishanth 1

அதேபோன்று இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மாவும் கடந்த சில ஆண்டுகளாகவே விக்கெட் வீழ்த்துவதில் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். அதன் காரணமாக அவருக்கு பதிலாக பல புதிய இளம் வேகம் பந்துவீச்சாளர்களை இந்திய நிர்வாகம் டெஸ்ட் அணியில் இணைத்தது. இதனால் இஷாந்த் சர்மாவின் கரியரும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானேவிற்கு பதிலாக ஹனுமா விகாரியும், இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக சிராஜும் சிறப்பாக செயல்படுவதால் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த இரண்டு சீனியர் வீரர்களுக்கு பதிலாக அவர்களே செயல்படுவார்கள் என்பதன் காரணமாக அவர்களது கரியர் முடிவுக்கு வந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs ENG : நான் பார்த்ததிலேயே மாஸ் கம்பேக் – இந்தியாவை பாராட்டிய தெ.ஆ ஜாம்பவான், கூறியது இதோ

ஏற்கனவே ஒரு நாள் மட்டும் டி20 கிரிக்கெட்டில் அவர்கள் இருவரும் விளையாடாத வேளையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓரங்கட்டப்பட்டுள்ளதால் இருவரும் விரைவில் ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement