இங்கிலாந்து கவுன்டியில் கலக்கி வரும் புஜாரா. தரமான சம்பவத்தை செய்து அசத்தல் – ரசிகர்கள் பாராட்டு

Cheteswar Pujara County
- Advertisement -

இந்திய அணியின் சீனியர் டெஸ்ட் வீரரான புஜாரா இந்திய அணிக்காக இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6792 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் இந்தியா மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் நியூசிலாந்து என உலகெங்கிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் முக்கிய வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் திகழ்ந்து வருகிறார்.

- Advertisement -

ஆனாலும் இயல்பாகவே மிகவும் பொறுமையாக விளையாடும் தன்மையுடைய புஜாராவிற்கு தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தடுமாற்றம் தான் இருந்து வருகிறது. அவரது பேட்டிங் ஸ்டைலே மிகவும் பொறுமையாக விளையாடுவது தான் என்றாலும் அவரது ஆட்டம் இந்திய அணியில் பெரியதாக எடுபடவில்லை.

அதே வேளையில் ஐபிஎல் தொடரிலும் அவருக்கு எந்த அணியிலும் வாய்ப்பு கிடைக்காத வேளையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

Pujara County Hat Trick

இந்திய அணிக்காக விளையாடும்போது சற்று சுமாராகவே விளையாடி வரும் இவர் தற்போது லண்டனில் நடைபெற்று வரும் ஒருநாள் கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அதிரடியாக விளையாடி வரும் புஜாரா ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு சதங்களை அடித்திருந்த வேளையில் தற்போது இந்த சீசனில் மூன்றாவது சதத்தை சசெக்ஸ் அணிக்காக அடித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : வறுமையில் வாடும் சச்சினின் நண்பருக்கு கிடைத்த பதவி – கோரிக்கையை ஏற்று உதவி செய்த தொழிலதிபர்

இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய புஜாரா 90 பந்துகளை சந்தித்து 132 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அவரது அதிரடியின் காரணமாக அந்த அணி வெற்றியும் பெற்றுள்ளது. புஜாரா இப்படி கவுன்டி கிரிக்கெட்டில் ஒரே சீசனில் 3 சதங்களை அடித்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement