தெ.ஆ தொடரின் அனைத்து போட்டிகளிலும் இந்திய பவுலர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் – சீனியர் வீரர் பேட்டி

Bowlers
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் டிசம்பர் 26-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு பயணித்து தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாடு எவ்வாறு அமையப்போகிறது என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

IND

- Advertisement -

இந்நிலையில் இந்த முக்கியமான டெஸ்ட் தொடர் குறித்து பேட்டியளித்துள்ள இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா கூறுகையில் : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களே நம்முடைய அணியின் பலம். அவர்களால் அயல்நாட்டு மைதானங்களிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. நிச்சயம் இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் 20 விக்கெட்டுகளை கைப்பற்றுவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே நாம் எந்த நாட்டிற்கு பயணித்தாலும் நம்முடைய அணியின் பந்துவீச்சு பலமாகவே உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற தொடர்களில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை நாம் பார்த்திருக்கிறோம். அதன்படி தற்போது தென் ஆப்பிரிக்க தொடரிலும் நமது பந்துவீச்சாளர்கள் அசத்துவார்கள் என்று கூறியுள்ளார்.

ind

இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 6589 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு எடுத்துக் கொண்ட சீனியர் வீரர்கள் தற்போது அணிக்கு திரும்பி உள்ளதால் இந்திய டெஸ்ட் அணி மேலும் பலம் அடைந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : லக்னோ அணியின் ஆலோசகராக கம்பீர் நியமிக்கப்பட இதுவே காரணம் – சஞ்ஜீவ் கோயங்கா அதிரடி

இந்நிலையில் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இல்லை என்ற குறையை போக்கி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்க நம் வீரர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement