புஜாரா ரன் அவுட்.! பாகிஸ்தான் வீரரை உதாரணம் காட்டி கிண்டல் செய்த ரவி சாஸ்திரி..!

pujara

கிரிக்கெட் விளையாட்டில் பொதுவாக ரன் அவுட் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் ஏனென்றால் ஒரு வீரர் பேட்டிங்கில் தவறு செய்து போல்டாகியோ  அல்லது கேட்சாகியோ வெளியே சென்றால் அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் ரன் அவுட் ஆகும்போது அவர்கள் மீது சற்று மனக்கசப்பையே ஏற்படுத்தும்.இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் புஜாரா ரன் அவுட் ஆகியுள்ளார் இவரின் இந்த ரன் அவுட்டை விமர்சகர்கள் கிண்டலடித்து உள்ளனர்.

RaviOutPut

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தொடக்கத்திலே இந்திய அணி தடுமாற்றத்தை கண்டது 15ரன்களிலே 2 விக்கட்டுகளை இழந்தது அப்போது கேப்டன் கோலியுடன் சதீஸ்வர் புஜாரா இணைந்தார் இவர்கள் இருவரும் பொறுப்பை உணர்ந்து அணியை கரை சேர்ப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 25பந்துகளை சந்தித்த புஜாரா 1 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தை தடுத்து ஆட முயன்ற புஜாரா தேவையில்லாமல் கோலியை ரன்னுக்கு அழைத்தார் இருமனதுடன் ஓடிய கோலி பின்வாங்கினர் அதற்குள் அந்த பந்தினை போப் த்ரோ செய்து புஜாராவினை ரன் அவுட் செய்தார்.இது குறித்து ரவி சாஸ்திரியிடம் கேட்டபோது அவர் புஜாரா உசேன் போல்ட் ஆக இருக்க தேவையில்லை  அதிகமுறை கிரிக்கெட்டில் ரன் அவுட் ஆன இன்சமாம் உல் ஹக் போல இருக்க வேண்டாம் என்று கிண்டலாக கூறியுள்ளார்

inzamam

கடந்த தென்னாப்பிரிக்கா தொடரின் போது கூட ஒரே தொடரில் இரண்டு முறை புஜாரா ரன் அவுட் ஆனார் எனவே இவர் ரன் ஓடும் போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் அது இந்திய அணிக்கு நல்லது என்று ரசிகர்களாகிய நாம் நம்பலாம்.பொறுமை அவசியம் புஜாரா.!