36 வயதில் இதை செய்யுறது சாதாரண விடயம் கிடையாது.. விராட் கோலியை பாராட்டிய – சத்தீஸ்வர் புஜாரா

Pujara and Kohli
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கைப்பற்றி அசத்தியது. கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்லாத ஆர்.சி.பி அணி தங்களது 18-வது சீசனில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

36 வயதில் இதை செய்யுறது எல்லாம் நம்பமுடியாதது : புஜாரா வாழ்த்து

இந்த தொடரில் பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 15 ஆட்டங்களில் விளையாடி 54 ரன்கள் சராசரியுடனும், 144 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 657 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார். அதோடு பஞ்சாப் அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் 43 ரன்களை குவித்திருந்தார். அவரது இந்த சிறப்பான பங்களிப்பின் மூலமாகவே பெங்களூரு அணி இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இந்த நடப்பு 2025 ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் 36 வயதில் இப்படி ஒரு சவாலான விடயத்தை கையில் எடுத்து செயல்படுவது சாதாரண விடயம் கிடையாது என இந்திய அணியின் அனுபவ வீரரான புஜாரா பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி உலகிலேயே ஒரு பிட்டஸ்ட் கிரிக்கெட்டர். அவரைப் போன்ற ஒரு வீரர் டி20 கிரிக்கெட்டில் இப்படி ஒரு புதிய சவாலை கையிலெடுத்து விளையாடுவது சாதாரண விடயம் கிடையாது. குறிப்பாக அவர் 140 முதல் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதை சிலர் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் அவர் விளையாடும் ஸ்ட்ரைக் ரேட்டால் அந்த அணி வெற்றி பெறுவது சிறப்பான ஒன்று. அவர் டி20 கிரிக்கெட்டராக மிகச் சிறப்பாக முன்னேறி இருக்கிறார். உண்மையிலேயே இந்த 36 வயதில் இவ்வளவு தூரம் விளையாடுவது என்பது அசாதாரணமானது. டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவந்துள்ள அவர் மிகப்பெரிய வீரராக திகழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க : 2025 ஐ.பி.எல் தொடரின் பெஸ்ட் பிளேயிங் 12-யை தேர்வுசெய்து அறிவித்த இர்பான் பதான் – லிஸ்ட் இதோ

ஆர்.சி.பி அணியின் பலமாக இத்தனை ஆண்டு காலம் இருந்து வந்து இன்று கோப்பையை கைப்பற்றியதெல்லாம் நம்ப முடியாத ஒரு காரியம். புதிய சாம்பியனாக மாறிய விராட் கோலிக்கு எனது வாழ்த்துக்கள் என புஜாரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement