கோலியின் எளிமை பற்றி புஜாரா என்ன பேசினார் தெரியுமா..!

kholifunny
- Advertisement -

இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலியின் பேட்டிங் திறமையை பற்றி நாம் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது கோலியின் கிரிக்கெட் மீதான மோகம், கிரிக்கெட் மீது அவர் வைத்துள்ள உணர்வு குறித்து இந்திய அணியின் சடீஸ்வர் புஜாரா தன்னுடைய கருத்தை தெரிவித்துளளார்.

pujarashot

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரரான புஜாரா, இந்திய அணியின் ஒரு சிறந்த டெஸ்ட் வீரராக கருதப்படுபவர். ராகுல் ட்ராவிடிற்கு பிறகு இந்திய அணிக்கு கிடைத்த ஒரு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று கூட இவரை கூறலாம். சமீபத்தில் இங்கிலாந்து கவுண்டி டெஸ்ட் தொடரிலும், ராயல் லண்டன் ஒருநாள் தொடரிலும் பங்குபெற்று வந்தார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் தொடரில் 3 அரை சதம் மற்றும் 1 சதத்தையும் குவித்துள்ளார். தற்போது வரும் ஜூன் 14 ஆம் தேதி தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வரவிருக்கிறது. இந்த தொடரில் புஜாரா இடம்பெற்றுளளர். ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடமாட்டார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்துது.

pujara

சமீபத்தில் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேட்டியளித்த புஜாரா, விராட் கோலி பற்றி கூறுகையில் “அவர் அதிகம் பேசுவார், எப்போதும் கிரிக்கெட் மீது மிகவும் உணர்வுபூர்வமாக இருப்பார். இந்திய கிரிக்கெட் அணியின் ட்ரெஸ்ஸிங் அரையை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருப்பார், அது ஒரு சிறந்த விடயம். மைதானத்திலும் சரி, மைதானத்திற்கு வெளியேயும் சரி சக வீரர்களுடன் நன்றாக பழகுவார் ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement