ஹோலி, தீபாவளி கொண்டாட்டம் இல்லை.! தந்தையால் வீட்டிற்குள் அடைபட்ட புஜரா.!

pujarasad
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரரான புஜாரா, இந்திய அணியின் ஒரு சிறந்த டெஸ்ட் வீரராக கருதப்படுபவர். ராகுல் ட்ராவிடிற்கு பிறகு இந்திய அணிக்கு கிடைத்த ஒரு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று கூட இவரை கூறலாம். சமீபத்தில் இங்கிலாந்து கவுண்டி டெஸ்ட் தொடரிலும், ராயல் லண்டன் ஒருநாள் தொடரிலும் பங்குபெற்று வந்தார்.

Cheteshwar Pujara

- Advertisement -

2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அதன் பின்னர் இந்திய அணியின் நம்பகரமான டெஸ்ட் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். இதுவரை 48 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 3789 ரன்களை அடித்துள்ளார். மேலும், டெஸ்ட்போட்டியில் 525 பந்துகளை எதிர்கொண்டு ராகுல் ட்ராவிடின்(495) சாதனையையும் முறியடித்துளளார் புஜாரா.

சமீபத்தில் ‘வாட் தி டக் ‘ என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற புஜாரா, தனது சிறு வயது கிரிக்கெட் அனுபவதியும், தனது தந்தை தனக்கு கிரிக்கெட்டில் உதவிய தருணங்களை நினைவு கூர்ந்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில்”எனது தந்தை எனது கிரிக்கெட் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். டென்னிஸ் பந்தில் விளையாடும் போது பந்து மிகவும் அதிகமாக பௌன்சர் ஆகும், அதனால் டென்னிஸ் பந்தில் விளையாடினால் என்னுடைய கிரிக்கெட் பாதிக்கப்ட்டிவிடும் என்று எண்ணி, என்னை டென்னிஸ் பந்தில் விளையாட அனுமதிக்கமாட்டார்.

pujara1

தனது தந்தையை பற்றி மேலும் கூறிய புஜாரா “நான் சிறுவயதாக இருக்கும் போது இந்தியாவின் இரண்டு பெரிய திருநாளாக கருதப்படும் ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகையின் போது வீட்டினுள் தான் அடைந்து இருப்பேன். ஏனேனில், எனது தந்தை, எங்கே நான் பட்டாசு வெடிக்கும் போது எனக்கு அடிபட்டு, கிரிக்கெட் விளையாட முடியாமல் போய்விடுமோ என்று எண்ணுவார்’என்று தெரிவித்துள்ளார்.

Advertisement