பொறுமைய சோதிச்சது கூட பரவாயில்லை. ஆனா கடைசில இப்படி ஆயிடுச்சே. புஜாராவுக்கு ஏற்பட்ட சோகம்

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 165 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துணை கேப்டன் ரஹானே 46 ரன்களை சேர்த்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாளான இன்று 348 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.#

rahane

- Advertisement -

இதன் மூலம் நியூசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.

ரஹானே 25 ரன்களுடனும், விஹாரி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மேலும் இந்திய அணி தற்போது தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று கூறலாம். இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நீண்ட நேரம் எப்படியாவது தாக்குப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த புஜாரா ரசிகர்களின் பொறுமையை சோதித்தார் என்றே கூறலாம்.

boult

மிகவும் பொறுமையாக தனது ஆட்டத்தை தொடர்ந்த புஜாரா 81 பந்துகளை சந்தித்து வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிலும் குறிப்பாக போல்டின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் அவர் போல்ட் ஆகி ஆட்டமிழந்தது சோகமான விடயம் ஆக மாறியது. இந்த விடயத்தை ரசிகர்கள் தற்போது இணையத்தில் கேலியாக கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் அவரது இந்த ஆமை வேக ஆட்டத்தின் மீதும் விமர்சனத்தை செய்து வருகின்றனர்.

Advertisement