கோபத்தில் பேட்டை தூக்கி தரையில் அடித்து சென்ற புஜாரா. என்ன நடந்தது ? – விவரம் இதோ

Pujara

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 578 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 218 ரன்களை குவித்து அசத்தினார். அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் குவித்துள்ளது.

pant 2

இதனால் இந்திய அணி தற்போது பாலோ ஆனை தவிர்க்க விளையாடி வருகிறது. அஸ்வின் மற்றும் சுந்தர் தற்போது நான்காவது நாளை சிறப்பாக ஆரம்பித்து விளையாடி வருகின்றனர். இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க வேண்டுமென்றால் 376 ரன்களுக்கு மேல் அடித்தாக வேண்டும். இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணிக்காக எப்பொழுதும் பொறுமையாக விளையாடும் புஜாரா சற்று அதிரடியாக நேற்றைய போட்டியில் விளையாடினார்.

அவ்வப்போது பல பவுண்டரிகளை அடித்து விளாசிய அவர் யாரும் எதிர்பாராத விதமாக அதிரடியாக விளையாடி வந்தார். அவரது ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தது. மேலும் அவர் பெரிய ரன்களை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெஸ் வீசிய 51வது ஓவரில் ஒரு ஷாட் அடிக்க முயற்சித்து அந்த ஷாட் ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த வீரரின் முதுகுப் பகுதியில் பட்டு காற்றில் பறந்தது.

pujara 1

அதனை மிட் ஆன் திசையில் இருந்த மற்றொரு வீரர் கேட்ச் பிடித்த புஜாராவை அவுட் செய்தார். இதனை கண்ட கடுப்பாகிய புஜாரா சற்று அதிருப்தி அடைந்தார். எப்போதுமே காலத்தில் கோபத்தை வெளிப்படுத்தாத புஜாரா நேற்று தான் அதிர்ஷ்டவசமின்றி அவுட் ஆனதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பேட்டை தரையை ஓங்கி அடித்து கோபத்துடன் வெளியேறினார்.

- Advertisement -

Pujara 2

இதுவரை பொறுமை நாயகனாக பார்க்கப்பட்ட புஜாரா முதல் முறை களத்தில் நேற்று கோபப்பட்டது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.