வாய்ப்பு கிடைக்காத விரக்தி. இந்தியாவை விட்டு வெளியேறும் புஜாரா – அதிகாரபூர்வ அறிவிப்பு (காரணம் இதுதான்)

pujara
- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் இலங்கை டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் நட்சத்திர அனுபவ வீரர்கள் செட்டேஸ்வர் புஜரா, அஜிங்கிய ரஹானே, ரித்திமான் சஹா, இசாந்த் சர்மா ஆகிய 4 மூத்த வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். ஏற்கனவே 35 வயதை கடந்துவிட்ட இவர்கள் சமீப காலங்களாக மிகச் சிறப்பாக செயல்பட தவறியதன் காரணமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதில் கடந்த 10 வருடங்களாக மிடில் ஆர்டர் பேட்டிங்கில் தூண்களாக செயல்பட்டு வந்த புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் கடந்த சில வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வந்தார்கள். இருப்பினும் அவர்களின் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தொடர்ச்சியாக நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்புகளில் ஒன்றைக் கூட முழுமையாக பயன்படுத்த தவறிய அவர்கள் தற்போது இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

தடுமாறும் புஜாரா:
இதில் இந்தியாவுக்காக 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பல சரித்திர வெற்றிகளில் பங்காற்றிய புஜாரா 100 போட்டிகளில் விளையாடி சாதனை படைப்பதற்கு முன்பாகவே இந்திய அணியில் இருந்து வெகுதூரம் சென்று விட்டார் என கூறலாம். அந்த வேளையில் காலம் காலமாக அவரைப் போன்ற பல வீரர்கள் பார்ம் இழக்கும்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையில் மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணியில் மீண்டும் வெற்றிகரமாக காலடி வைத்துள்ளார்கள்.

வேலையாகாத ரஞ்சி கோப்பை:
அந்த வகையில் இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசனில் நடப்பு சாம்பியனாக இருந்த சௌராஷ்டிரா அணிக்காக புஜாரா விளையாடினார். கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த லீக் சுற்றின் முடிவில் அவர் இடம் வகித்த சௌராஷ்ட்ரா அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற தவறுயது. இதன் காரணமாக ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்குள் நுழையலாம் என்ற புஜாராவின் திட்டம் வேலை ஆகவில்லை என்று கூறினால் மிகையாகாது.

- Advertisement -

ஏனெனில் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் அவர் மும்பை அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகி 2வது இன்னிங்சில் 91 (83) ரன்கள் எடுத்தார். அதேபோல் ஒடிசா அணிக்கு எதிரான 2-வது லீக் போட்டியில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் கோவா அணிக்கு எதிராக நடந்த கடைசி போட்டியில் முதல் இன்னிங்ஸில் 28 (47) ரன்கள் எடுத்த அவர் 2வது இன்னிங்ஸ்சில் 64* (62) ரன்கள் எடுத்தார். அவரை போன்ற ஒருவர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டுமெனில் அதற்கு சதம் மேல் சதமடித்து நிறைய ரன்கள் குவித்தால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்பட தவறிய அவர் ஒரு சதம் கூட அடிக்காமல் வெறும் 191 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் காரணமாக ரஞ்சி கோப்பையின் வாயிலாக இந்திய அணிக்கு மீண்டும் திரும்பலாம் என்று அவரின் எண்ணம் வெற்றி அடையவில்லை.

கவுண்டி தொடரில் புஜாரா:
அப்படிப்பட்ட இந்த வேளையில் கடந்த வருடமாவது சென்னை அணியின் பெஞ்சில் அமர்ந்து வந்த அவரை இந்த வருடம் எந்த அணியும் வாங்காத காரணத்தால் ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்கப் போவதில்லை. எனவே ஐபிஎல் நடைபெறும் நேரத்தை வீணடிக்காமல் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதற்கான முயற்சியை தொடரும் புஜாரா இங்கிலாந்தின் பிரபல கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். அந்த அணிக்காக ஏற்கனவே விளையாடி வந்த ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தமக்கு குழந்தை பிறப்பதை ஒட்டி நாடு திரும்ப உள்ளதால் அவருக்கு பதில் விளையாட புஜாராவை அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கு முன் யோர்க்சயர் மற்றும் நாட்டிங்காம்ஷயர் போன்ற அணிகளுக்காக ஏற்கனவே கவுண்டி தொடரில் விளையாடியுள்ள அவர் இந்த முறை சசெக்ஸ் அணிக்காக முதல் முறையாக விளையாட ஒப்பந்தமாகியுள்ளதாக அந்த அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. இதை அடுத்து வரும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் துவங்கும் கவுண்டி தொடரின் முதல் போட்டியில் இருந்து பங்கேற்க இருக்கும் புஜாரா வரும் செப்டம்பர் வரை நடைபெற உள்ள நேஷனல் ஒன்டே சாம்பியன்ஷிப் வரை சக்செக்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் “சசெக்ஸ் அணிக்காக விளையாடி அதன் வெற்றியில் பங்காற்றுவதற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்” என புஜாரா கூறியுள்ளார். எப்படியோ இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் கூட மீண்டும் அதில் காலடி வைப்பதற்காக அவர் போராடுவது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும். இருப்பினும் கவுண்டி தொடரில் அவர் ரன்கள் அடித்தால் மட்டுமே மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement