டீம்ல ஜாயின் பண்ணனும் சீக்கிரம் கிளம்பி துபாய் வாங்க. 2 இந்திய வீரருக்கு அழைப்பு விடுத்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

Ind-lose

இந்த வருட ஐபிஎல் தொடர் நவம்பர் 10ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இந்த ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஐபிஎல் தொடரில் ஆடிக்கொண்டிருக்கும் இந்திய வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவிற்கு நேரடியாக செல்கின்றனர். ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கப்போகிறது. இதற்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது அறிவிக்கப்பட்டுள்ள வீரர்கள் அனைவரும் அங்கிருந்தே நேரடியாக ஆஸ்திரேலியா சென்று விடுவார்கள்.

INDvsAUS

ஆனால் டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருக்கும் புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோர் தற்போது இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களும் நேரடியாக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து அதன் பின்னர் இந்திய அணியினருடன் இணைந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்கின்றனர். இதன் காரணமாக ஆறு நாட்கள் இருவரும் துபாய் சென்று தனிமையில் இருக்க போகின்றனர்.

இதற்காக புஜாரா, ஹனுமா விஹாரி இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் இந்தியாவிலிருந்து துபாய்க்கு செல்ல உள்ளனர்.

Pujara-2

டெஸ்ட் அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், சத்தேஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே, ஹனுமா விஹாரி, சுப்மான் கில், விருத்மான் சாஹா, ரிஷப் பந்த், பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் ஷைனி, குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், முகமது சிராஜ்.

- Advertisement -

ஒருநாள் அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், சுப்மான் கில், கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால், ரவிந்திர ஜடேஜா, யஜூவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் ஷைனி, சர்துல் தாக்கூர்.

டி20 அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்ஸன், ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யஜூவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் ஷைனி, தீபக் சாஹர், வருண் சக்ரவர்த்தி.