லார்ட்ஸ் டெஸ்ட் : புதிய சாதனை படைத்த புஜாரா – ரஹானே ஜோடி – என்ன சாதனை தெரியுமா ?

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்களை குவிக்க இங்கிலாந்து அணியோ 391 ரன்கள் குவித்து 27 ரன்கள் முன்னிலை பெற்றது. அதனை தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

pujara 1

- Advertisement -

இதனால் மீதமுள்ள விக்கெட்டுகளையும் இழந்து எளிதில் தோற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் இந்திய அணியின் பவுலர்களான ஷமி மற்றும் பும்ரா இருவரது அபார ஆட்டத்தால் தற்போது இந்திய அணி 286 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்த போட்டி பெரும்பாலும் டிராவில் முடியவே அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இரண்டாவது இன்னிங்சில் ராகுல், ரோஹித், கோலி என மூவரது விக்கெட்டையும் அடுத்தடுத்து 55 ரன்களில் இழக்க அந்த நேரத்தில் இந்திய அணி எளிதில் மடமடவென சரிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

Anderson

ஆனால் அந்த நேரத்தில் பொறுப்புடன் விளையாடிய ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் அணியை சற்று நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தது மட்டுமின்றி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் ஒரு சாதனை ஒன்றினை நிகழ்த்தினர். அந்த சாதனை யாதெனில் லார்ட்ஸ் மைதானத்தில் 4-ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.

rahane

இவர்கள் இருவரும் அடுத்த போட்டியில் விளையாட வேண்டுமா ? என்று அனைவரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் ரகானே அரைசதம் அடித்தும், புஜாரா 45 ரன்களும் அடித்து ஓரளவு தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement