கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட முக்கியமான டி20 தொடர் – ரசிகர்கள் வருத்தம்

psl
- Advertisement -

6ஆவது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் கராச்சியில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் பாக்கிஸ்தானில் சமீப நாட்களாக கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. இதன் காரணாமாக இந்த தொடரில் பங்கெடுத்த 2 வெளிநாட்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று விட்டது. அவர்களை பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரைந்து தனிமைப்படுத்தியது. தொடரை இனி நல்லபடியாக முடித்து விடலாம் என நினைத்திருந்தனர்.

psl 1

- Advertisement -

ஆனால் எதிர்பாராத விதமாக மேலும் 4 வீரர்கள் மற்றும் ஒரு உதவி பயிற்சியாளர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையின் பின்னர் உறுதியானது. இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் பங்கெடுத்தவர்களில் மொத்தமாக 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவை இனி கட்டுப்படுத்த முடியாது என அச்சப்பட்டு
சில வெளிநாட்டு வீரர்கள் தொடரில் இருந்து விலகி தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப திட்டமிட்டனர். இந்த விவகாரம் பற்றி கேள்விப்பட்டு இது குறித்து பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்திய பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடரை தற்போதைக்கு தள்ளிவைக்க போவதாக அறிவித்துள்ளது.

psl 2

அவ்வளவு பாதுகாப்பாக செயல்பட்டமே எப்படி , எங்கு தவறு நடந்தது என்பதை விரைவில் விசாரனை மூலம் கண்டறியப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் தெரிவித்துள்ளார். லீக் ஆட்டத்தின் ஒரு சுற்று கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது. இஸ்லாமாபாத் அணிக்கும் லாகூர் அணிக்குமான அந்த போட்டி முடிந்தால் லீக் போட்டிக்கான ஒரு சுற்று முடிந்து விடும்.

psl 3

பின்னர் அடுத்த சுற்று சூடு பிடிக்கும் அதன் பின்னர் பிளேஆப்ஸ் என்று எண்ணி மகிழ்ச்சியாக இருந்த ரசிகர்களுக்கு இச்செய்தி மிகப்பெரிய வருத்தத்தை ஏற்தடுத்தியுள்ளது. தொடர் மறுபடியும் நல்லபடியாக தொடருமா அல்லது இந்தாண்டு தொடரையே கேன்சல் பண்ணி விடுவார்களா என்கிற பயத்தில் பாக்கிஸ்தான் ரசிகர்கள் மிகுந்த தேனையில் உள்ளனர்.

Advertisement