2 ஃபார்மட்டில் போனது நல்லதா போச்சு.. விராட், ரோஹித்தால் இதுக்கு புத்துயிர் கிடைச்சுருக்கு.. ப்ரியங் பஞ்சல்

Priyank Panchal
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. ஜனவரி 11ஆம் தேதி வதோதராவில் துவங்கிய அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாடுகின்றனர். அதனால் அவர்களுடைய ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

ஏனெனில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இந்திய அணியின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ள அவர்கள் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டனர். எனவே ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடைபெற திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன் வயதைக் காரணமாக வைத்து அவர்களைக் கழற்றி விட தேர்வுக்குழு முயற்சித்து வருகிறது.

- Advertisement -

ஓய்வு பெற்றது நல்லதா போச்சு:

அதற்காக அசராத ரோஹித் சர்மா கடந்த ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி தொடர்நாயகன் விருது வென்று பதிலடி கொடுத்தார். அத்துடன் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ள அவர் 38 வயதானாலும் தம்மால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார். அதே போல கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடி தொடர்நாயகன் விருது வென்ற விராட் கோலி தரவரிசையில் நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறி பதிலடி கொடுத்துள்ளார்.

அது மட்டுமின்றி 2025/26 விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் விளையாடிய அவர்கள் சதமடித்து தங்களுடைய ஃபார்மை நிரூபித்தனர். அவர்கள் விளையாடிய காரணத்தால் ஏராளமான ரசிகர்கள் விஜய் ஹசாரே கோப்பை தொடரையும் பார்த்தார்கள் என்றே சொல்லலாம். இந்நிலையில் விராட், ரோஹித் விளையாடுவதால் பெரும்பாலான ரசிகர்கள் ஒருநாள் போட்டிகளை பார்ப்பதாக இந்திய வீரர் பிரியங் பஞ்சல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

உயிர்பிக்க உதவிய விராட், ரோஹித்:

எனவே அழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒருநாள் போட்டிகள் விராட், ரோஹித் விளையாடுவதால் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “டெஸ்ட், டி20 ஆகிய மற்ற 2 ஃபார்மெட்டில் விராட், ரோஹித் ஓய்வு பெற்றது ஒருநாள் கிரிக்கெட்டுக்கு நடந்த சிறந்த விஷயமாகும்”

இதையும் படிங்க: பும்ராவை விட அவர் ஃபிட்டாக இருந்தா தான்.. இந்தியா 2026 டி20 உ.கோ ஜெய்க்க வாய்ப்பிருக்கு.. கங்குலி பேட்டி

“ஏனெனில் 50 ஓவர் போட்டிகள் தன்னுடைய கடைசி காலத்தில் இருந்ததாக தெரிந்தது. ஆனால் தற்போது இந்தியாவின் 2 மிகப்பெரிய ஜாம்பவான்கள் பிரத்தியேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவதால் அந்த ஃபார்மட் திடீரென புத்துயிர் பெற்றது போல இருக்கிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2026 புத்தாண்டில் அவர்கள் இந்தியாவுக்காக 18 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement