- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2வது முறையாக சொதப்பல்.. இப்போ பழி போட விராட், ரோஹித்தும் இல்ல.. அகர்கர், கம்பீரை சாடிய பஞ்சல்

கௌகாத்தியில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 2 போட்டிகள் கொண்ட அத்தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 15 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் இந்தியா தோற்றது. அந்த நிலைமையில் நவம்பர் 22ஆம் தேதி துவங்கிய இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக சீனுரான் முத்துசாமி சதமடித்து 106, மார்க்கோ யான்சன் 93 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய இந்தியா மோசமாக பேட்டிங் செய்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58, வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்த நிலையில் தெனாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

விராட், ரோஹித் இல்ல:

அடுத்து விளையாடும் தென்னாப்பிரிக்கா 3வது நாள் முடிவில் 26/0 ரன்களை எடுத்து மொத்தம் 314 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் இந்தியா வெற்றி பெறுவது கடினமாகியுள்ளது. ஒருவேளை போட்டியை டிரா செய்தாலும் 25 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் இந்தியா 1 – 0 (2) என்ற கணக்கில் தொடரை இழக்கும். இந்நிலையில் அப்படி தோற்றால் பழியை போடுவதற்கு இம்முறை விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லையென்று இந்திய வீரர் பிரியங்க் பஞ்சல் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கில் முதல் முறையாக இந்தியா வரலாறு காணாத ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்தித்தது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் 3 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா தோற்றது. அதற்கு விராட் கோலி, ரோஹித் தான் காரணம் என்று பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கருதினார்கள்.

- Advertisement -

வெற்றிக்கு எல்லாரும் அசத்தனும்:

எனவே இங்கிலாந்து தொடருக்கு முன் அவர்களை தேர்வுக்குழு கழற்றி விட முடிவெடுத்தது. அதற்கு முன் அவர்களாகவே மரியாதையுடன் ஓய்வு பெற்றனர். அந்த சூழ்நிலையில் தற்போதைய தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணி தடுமாறுவதால் தோல்விக்கு விராட், ரோஹித் மட்டும் காரணமில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக பஞ்சல் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: இந்தியாவுக்காக 2016 மாதிரி மேஜிக் செய்யத் தயார்.. அடேய் சந்து கேப்பில் வாய்ப்பு கேட்ட நாயருக்கு.. அஸ்வின் பதில்

“முதல் முறை கடி, 2வது முறை கூச்சமா? நியூசிலாந்து தொடரில் நடந்த விஷயங்கள் மீண்டும் வருகின்றன. கடந்த முறை தேவைப்படும் சமயத்தில் மற்ற பேட்ஸ்மேன்களும் அசத்த வேண்டும் என்பதை மறந்த மக்கள் தோல்விக்கு விராட், ரோஹித் முக்கிய காரணமானதாக நியாயமின்றி குற்றம் சொன்னார்கள். தற்போது அந்த வசதி இல்லாததால், இளம் பயிர்கள் கடினமான நேரத்தை எதிர்கொள்கின்றன” என்று கூறியுள்ளார்.

- Advertisement -